6 மணி நேரத்துக்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கிய பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்!
6 மணி நேரத்துக்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கிய பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்!
மாதிரிப் படம்
பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் மெசெஞ்சர் ஆகியவற்றின் சேவை இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணிக்கு முடங்கியது. சுமார் 6 மணி நேரத்துக்கு பின் அவற்றின் சேவை மெல்லமெல்ல சரி செய்யப்பட்டு வருகிறது.
பிரபல சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கிய நிலையில், சுமார் 6 மணி நேரத்துக்கு பின் அவை மீண்டும் செயல்பட தொடங்கின.
வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணி முதல் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கியது. முதலில் தங்களின் இணையத் தொடர்பில் பிரச்சனை இருப்பதாக கருதிய பயனர்கள், சில மணி நேரத்துக்கு பின்பே சேவை முடங்கியதை அறிந்தனர்.
இந்த பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டது. இதனால் அவற்றை சார்ந்துள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொழில்நுட்ப காரணமாக சேவை முடங்கியதாக ஃபேஸ்புக் ( facebook) நிறுவனம் குறிப்பிட்டது. கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் சேவை மீண்டும் கிடைக்கும் என்று ஃபேஸ்புக் கூறியது.
சுமார் 6 மணி நேரத்துக்கு பின் அவற்றின் சேவை மெல்லமெல்ல சரி செய்யப்பட்டு வருகிறது. இது மிகப் பெரிய சேவை பாதிப்பு என டவுண்டிடெக்டர் (Downdetector) நிறுவனம் கூறியுள்ளது. உலகம் முழுவதும் 10.6 மில்லியம் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடைசியாக கடந்த 2019ம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கியது. எனினும், இது ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது.
தற்போது, 6 மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக், வாட்ஸ் அப் (whatsapp), இன்ஸ்டாகிராம் (instagram) ,பேஸ்புக் மெசெஞ்சர் (messenger) ஆகியவற்றின் சேவை முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பேர் பாதிக்கப்பட்டனர்.
Published by:Murugesh M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.