• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: உறுதியளித்த முன்னணி நிறுவனங்கள்!

சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: உறுதியளித்த முன்னணி நிறுவனங்கள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஃபேஸ்புக், டிவிட்டர், கூகிள் மற்றும் டிக்டாக் ஆகிய சமூக வலைத்தளங்கள், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய, உயர் நிலை பாதுகாப்பு அமைப்புகளையும், தானியங்கி முறையில் உள்ளடக்கங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளன.

  • Share this:
ஃபேஸ்புக், டிவிட்டர், கூகிள் மற்றும் டிக்டாக் ஆகியவை முன்னணியில் இயங்கி வரும் சமூகவலைதளங்களாகும். இத்தளங்களில் தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை முதல் பல்வேறு விதமான தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த முன்னணி நிறுவனங்கள் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களுக்கு ஆன்லைனில் ஏற்படும் தொல்லைகளை சமாளிப்பதற்கும் போதிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளன.

இது பற்றி, ஐ.நா பாலின சமத்துவ மன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப தளத்தில் கோலோச்சி வரும் நிறுவனங்களும் தங்களின் சமூக ஊடங்கங்கள் மற்றும் வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதை தெரிவித்துள்ளது. WWWF உடன் ஒரு வருடமாக நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டது. பெண்கள் தங்கள் பதிவுகளை யார் பார்க்கலாம், தங்களின் பதிவுகளுக்கு யார் விருப்பம் அல்லது கருத்து தெரிவிக்கலாம் அல்லது பதில் அளிக்கலாம் என்பதில் கட்டுப்பாட்டை விரும்புகிறார்கள்.

அது மட்டுமின்றி, தவறான மற்றும் இடுகைகளுக்கு, சிறந்த மற்றும் பதிலளிக்கக்கூடிய உள்ளடக்க அறிக்கையிடல் பயன்முறையின் தேவையும் உள்ளது. ஆன்லைனிலும் சமூக ஊடகங்களிலும் பெண்களைப் பாதுகாப்பாக உணர வைப்பதற்கான தேவையைச் சமாளிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் எட்டு முனை அணுகுமுறைக்கு உறுதியளித்துள்ளன.

ALSO READ |  கல் போல் மாறிய 5 மாதபெண் குழந்தை: புரியாத புதிர் நோயால் பெற்றோர் அதிர்ச்சி

நிறுவனங்கள் எடுத்துள்ள உறுதிமொழியில் ஃபேஸ்புக், ட்விட்டர் , கூகிள் மற்றும் டிக்டாக் ஆகியவை கூடுதல் உயர்நிலை அமைப்புகளை (எடுத்துக்காட்டாக, யார் இடுகைகளைக் காணலாம், பகிரலாம், கருத்து தெரிவிக்கலாம் அல்லது பதிலளிக்கலாம்), பயன்பாட்டு இடைமுகத்தை, முழுவதும் எளிய மற்றும் அணுகக்கூடிய மொழியில் வழங்குவதாகக் கூறுகின்றன.

சுலபமான நேவிகேஷன் மற்றும் பாதுகாப்பு கருவிகளுக்கான அணுகலை வழங்குதல் மற்றும் பெண்கள் பார்க்கும் துஷ்பிரயோகத்தின் அளவை முன்கூட்டியே குறைக்கக்கூடிய தானியங்கி உள்ளடக்க கண்காணிப்பு நடவடிக்கைகளும் உள்ளன.

ALSO READ | டைனோசரின் மூதாதையர் கழிவில் இருந்து புதிய வண்டு இனங்கள் கண்டுபிடிப்பு

புகார் அளிக்கும் அமைப்புகள், இதற்கு முன்பு யூசர்கள் புகார் அளித்த  தவறான, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்க விவரங்களை டிராக் செய்யவும் உதவுகிறது. அது மட்டுமின்றி, புகாரை சரியான முறையில் புரிந்து கொள்ளவும், அதற்கு பொருத்தமான தீர்வை வழங்கவும், சரியான மொழியை பயன்படுத்தவும், ஒரு யூசர் ஏதேனும் தவறான நடத்தையை புகார் அளிக்கும் போது, அது பற்றிய கொள்கைகளை தெளிவு படுத்தவும், இது உதவி செய்கிறது. மேலும், பெண்களுக்கு, புகார் அளிக்கும் செயல்முறையில் உதவி மற்றும் ஆதரவை சுலபமாக அணுக நிறைய தேர்வுகளும் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“நீண்ட காலமாக, பெண்கள் மீது தொடர்ச்சியாக வன்முறை, பாலியல் ரீதியான தாக்குதல், மற்றும் துஷ்பிரயோகம் நடந்து வருகிறது. இதனாலேயே பல பெண்கள் ஆன்லைன் உலகில் அமைதியாகவே இருக்கின்றனர். இது பாலியல் சமத்துவத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்தார், வெப் ஃபவுண்டேஷன் மூத்த கொள்கை மேலாளர், அஸ்மீனா த்ரோடியா. பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இந்த பிரச்சனை எவ்வளவு தீவிரமானது என்பதைக் குறிக்கிறது.

ALSO READ | ஆன்லைன் வகுப்பில் பெண்ணுடன் செக்ஸ் வைத்த மாணவர்.. அதிர்ச்சியில் உறைந்த பேராசிரியர், சக மாணவர்கள்.!

தி எகனாமிஸ்ட் வெளியிட்ட அறிக்கையில், 'பெண்களுக்கு எதிரான ஆன்லைன் வன்முறைகளின் அளவை அளவிடுதல்' கணக்கெடுப்பின் போது, சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் உள்ள பெண்களில், 38% பெண்கள், துஷ்பிரயோகம் அல்லது வன்முறை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை, பாதிக்கப்பட்ட இளம் பெண்களில் 45% ஆக அதிகரிக்கிறது.

அது மட்டுமின்றி, கிட்டத்தட்ட 63% பெண்கள் ஸ்டாக்கிங் மற்றும் ஹேக்கிங் பிரச்சனைக்கு இலக்காகி உள்ளனர். இந்நிலையில், கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 78% பேர் தங்களுக்கு புகார் அளிக்கும் நடவடிக்கைகள் குறித்து பெரும்பாலும் தெரியாது என்றே கூறியுள்ளது வருத்தத்திற்குரியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: