ஃபேஸ்புக் ஆப் கூட இல்லையா? நீங்களும் தான் கவனிக்கப்படுகிறீர்கள்!

ஆண்ட்ராய்டு பயன்படுத்தினாலே போதும். நீங்கள் ஃபேஸ்புக்கின் வளையத்தில் தான் ஏற்கெனவே இருக்கிறீர்கள் என அர்த்தம்.

ஃபேஸ்புக் ஆப் கூட இல்லையா? நீங்களும் தான் கவனிக்கப்படுகிறீர்கள்!
ஃபேஸ்புக்
  • News18
  • Last Updated: January 4, 2019, 2:07 PM IST
  • Share this:
ஃபேஸ்புக் ஆப் கூட பயன்படுத்தவில்லை. அதனால் உங்களது தகவல்கள் கசிய வாய்ப்பே இல்லை என நினைக்க வேண்டாம். ஆண்ட்ராய்டு பயன்படுத்தினாலே போதும். நீங்கள் கவனிக்கப்படுவோரின் வலையத்தில் தான் சிக்கியுள்ளீர்கள்!

தகவல்கள் லீக் ஆவது, பயனாளர்களின் சுய தகவல்களை ஆராய்தல் என ஃபேஸ்புக் நிறுவனம் மீது தொடர்ந்து சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் நீடித்தே வருகின்றன.

இதில், ஃபேஸ்புக் பயன்படுத்தினால் மட்டும் தான் நமது தகவல்கள் வெளியாகும். இல்லையேல் நாமும் நமது சுய தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும் என்றே நினைத்திருப்போம்.


ஆனால், ஆண்ட்ராய்டு பயன்படுத்தினாலே போதும். நீங்கள் ஃபேஸ்புக்கின் வளையத்தில் தான் ஏற்கெனவே இருக்கிறீர்கள் என அர்த்தம். Privacy International என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஃபேஸ்புக் தனது பயனாளர்கள், பயன்படுத்தாதவர்கள் என அனைவரையுமே கவனித்து வருவதாகக் கூறுகிறது.

சுமார் 87 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் தொடர்ந்து ஃபேஸ்புக்கின் கண்காணிப்பில் தான் உள்ளது என கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனமும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களில் உள்ள பயணம், ஹோட்டல், வேலைவாய்ப்பு ஆப் என எதைப் பயன்படுத்தினாலும் ஒரு ஆப் மூலமாகவே அனைத்துத் தகவல்களும் ஃபேஸ்புக்-க்குப் பரிமாறுவதாகக் கூறுகிறது ப்ரைவஸி இண்டெர்நேஷனல் நிறுவனம்.

Loading...

இதன் அடிப்படையில் ஃபேஸ்புக் என்ற ஒன்றை கேள்விப்படாதவரைக் கூட ஃபேஸ்புக் தனது கண்காணிப்பின் கீழ் தான் வைத்துள்ளது என்கிறது ஆய்வு.

மேலும் பார்க்க: சென்னை மெரினாவில் இன்னொரு 96... வகுப்பறை அலப்பறைகளை பகிர்ந்த தோழிகள்
First published: January 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...