சமூக வலைதளங்கள் வெறுமனே பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டும் அல்லாமல் இணைய வர்த்தக தளங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு ஃபேஸ்புக்கில் நீங்கள் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கும்போது இடை இடையே விளம்பரங்கள் வந்து செல்வதை பார்த்திருப்பீர்கள். அதேபோல, லைவ் ஷாப்பிங் என்ற வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் நடத்தி வருகிறது.
அதாவது, உங்கள் புராடக்டுகளை டேக் செய்து, லைவ் வீடியோ மூலமாக அதற்கான வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். தொடர்ச்சியான உங்களது புராடக்டுகளுக்கு பிளே லிஸ்ட் ஒன்றையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், இந்த வசதிகள் அனைத்தும் அக்டோபர் 1ம் தேதி முதல் முடிவுக்கு வருகின்றன என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் குறுகிய நேர வீடியோக்களாக வலம் வந்து கொண்டிருக்கும் ரீல்ஸ் மீது கவனம் செலுத்த உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
லைவ் ஷாப்பிங் தடை செய்யப்படுகிறது என்றாலும், யூசர்கள் ஃபேஸ்புக் லைவ் பயன்படுத்தி தங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யலாம். ஆனால், லைவ் வீடியோக்களை பயன்படுத்தி புராடெக்டுகளை பட்டியலிட முடியாது.
இதுகுறித்து கடந்த புதன்கிழமை அன்று ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “வாடிக்கையாளர்கள் குறுகிய வீடியோவாக வலம் வருகின்ற ரீல்ஸ்-களை பார்ப்பதற்குத்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆகவே, எங்களது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் மீது கவனம் செலுத்த இருக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : முன்னணி மியூசிக் செயலிகளுக்கு போட்டியாகக் களமிறங்கும் டிக்டாக் மியூசிக்.!
ரீல்ஸ் மூலமாக விளம்பரம் செய்யலாம்
வாடிக்கையாளர்களை வீடியோ மூலமாக சென்றடைய வேண்டும் என்று விரும்பினால் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வரும் ரீல்ஸ் வீடியோ அல்லது ரீல்ஸ் விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலமாக முயற்சி செய்யலாம் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. ரீல்ஸ் வீடியோக்களில் பிராடக்டுகளை டேக் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைவ் வீடியோவை டவுன்லோடு செய்யலாம்
லைவ்வாக வெளியிட்ட வீடியோவை நீங்கள் உங்களுடைய டிவைஸில் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால் கிரியேட்டர் ஸ்டூடியோ என்ற மெனுவில் அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
Also Read : இந்தியாவில் BGMI ஆப் தடை செய்யப்பட்டது ஏன்? 3 முக்கிய காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
தாய்லாந்தில் தொடங்கப்பட்ட லைவ் வசதி
முன்னதாக, ஃபேஸ்புக் தளத்தில் கிடைக்கும் லைவ் வசதியானது, கடந்த 2018ஆம் ஆண்டு தாய்லாந்தில் தொடங்கப்பட்டது. ரீல்ஸ் விளம்பரங்கள் மூலமாக ஃபேஸ்புக் நிறுவனம் ஆண்டுதோறும் 1 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டுகிறது. தற்போதைய 2வது காலாண்டில், ரீல்ஸ் மூலமாக கிடைக்கும் வருவாய் என்பது 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீல்ஸ் என்பது டிக்டாக் தளத்தில் வரும் குறுகிய வீடியோக்களுக்கு போட்டியாக ஃபேஸ்புக் தொடங்கிய வசதி ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Facebook, Online shopping, Technology