’ஸ்டோரீஸ்’ அம்சத்தை நீக்குகிறது ஃபேஸ்புக்- செப்டம்பர் 26-ம் தேதி முதல் அமல்!

இதனால், நீங்கள் இதற்கு முன்னர் பதிவிட்டிருந்த ஸ்டோரீஸ் நீக்கப்படும். புதிதாகவும் எதையும் பதிவு செய்யமுடியாது.

’ஸ்டோரீஸ்’ அம்சத்தை நீக்குகிறது ஃபேஸ்புக்- செப்டம்பர் 26-ம் தேதி முதல் அமல்!
ஃபேஸ்புக்
  • News18
  • Last Updated: September 23, 2019, 10:23 PM IST
  • Share this:
ஃபேஸ்புக் தளத்தில் இருந்து க்ரூப் ஸ்டோரீஸ் (Group Stories) அம்சம் வருகிற செப்டம்பர் 26-ம் தேதி முதல் நீக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்தில் Group Stories என்னும் அம்சம் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், செப்டம்பர் 26-ம் தேதி இரவு 9.30 உடன் இந்த அம்சம் தளத்திலிருந்தே நீக்கப்பட உள்ளது.

அதவாது க்ரூப் ஸ்டோரீஸ் அம்சமே நீக்கப்படுகிறது. இதனால், நீங்கள் இதற்கு முன்னர் பதிவிட்டிருந்த ஸ்டோரீஸ் நீக்கப்படும். புதிதாகவும் எதையும் பதிவு செய்யமுடியாது. தனிப்பட்ட பயனாளர் ஒருவரின் ஸ்டோரீஸ் அம்சம் நீக்கப்படாது. க்ரூப் ஸ்டோரீஸ் அம்சம் பெரும்பாலும் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்ததாலே இந்த அம்சத்தை நீக்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இதுகுறித்து ஃபேஸ்புக் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ஃபேஸ்புக் தளத்தை இன்னும் உற்சாகமூட்டுவதாக எப்படி மாற்றலாம் என்றே யோசிப்போம். பயனாளரின் உபயோகத்தை இன்னும் உற்சாகமானதாகவும் பயனுள்ளதாக மாற்றவுமே முயற்சித்து வருகிறோம்” என்றுள்ளார்.

மேலும் பார்க்க: அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் முதலிடம்..! அதிகப் பயனாளர்களால் சாதித்த கூகுள் பே

தேசியக் கல்விக் கொள்கையால் பாதிப்பு! கல்வியலாளர் வேதனை
First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்