எதிர்ப்புகளையும் மீறி லிப்ரா கரன்ஸி வெளியீட்டுக்குத் தயாராகும் ஃபேஸ்புக்..!

லிப்ராவை பாதுகாக்க ‘கேலிப்ரா’ என்னும் வாலெட் முறையும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

எதிர்ப்புகளையும் மீறி லிப்ரா கரன்ஸி வெளியீட்டுக்குத் தயாராகும் ஃபேஸ்புக்..!
லிப்ரா கரன்ஸி.(Reuters)
  • News18
  • Last Updated: September 23, 2019, 5:44 PM IST
  • Share this:
லிப்ரா என்னும் டிஜிட்டல் கரன்ஸியை நிச்சயமாக அடுத்த ஆண்டு வெளியிடுவோம் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் தனது புதிய க்ரிப்டோகரன்ஸி குறித்த அறிவிப்பை வெளியிட்டது. சர்வதேச அளவில் இந்த டிஜிட்டல் கரன்ஸிக்குப் பெரும் எதிர்ப்புகள் எழுந்தது. பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற சபைகளில் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் ஆக்ரோஷமான விவாதங்கள் நடைபெற்றன.

டிஜிட்டல் கரன்ஸியை அறிமுகம் செய்யும் போது ஒரு அரசுக்குக் கூட இல்லாத உரிமையை தனியாருக்கு வழங்குவது எப்படி என்ற கேள்விதான் நீடித்து வருகிறது. ஆனால், சமீபத்தில் ஸ்விஸ் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த ஃபேஸ்புக் நிர்வாகி டேவிட் மார்கஸ், “வருகிற பிப்ரவரி மாதம் லிப்ரா கரன்ஸியை அறிமுகம் செய்வதே எங்கள் இலக்கு. அதற்கு முன்னர் லிப்ரா தொடர்பான அத்தனை சந்தேகங்களையும் நாங்கள் விளக்குவோம். ஒரு ஆரோக்கியமான புரிதலை ஏற்படுத்துவோம்” எனக் கூறியுள்ளார்.


ஃபேஸ்புக்கின் முதற்கட்ட அறிவிப்பின் அடிப்படையில் ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி அல்லது பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நிழல் மட்டுமல்லாது நிஜ உலக நாணயமாகவே லிப்ரா இருக்கப்போகிறது. லிப்ராவை பாதுகாக்க ‘கேலிப்ரா’ என்னும் வாலெட் முறையும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேலும் பார்க்க: இனி இணைய சேவை இல்லாமலும் கூகுள் அசிஸ்டென்ட் சேவையைப் பயன்படுத்தலாம்!

காங்கிரஸ் எம்.பியை ஒருமையில் விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்