• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • லைவ் ஆடியோ ரூம்ஸ் அம்சத்தை பயன்படுத்த கிரியேட்டர்களுக்கு பணம் கொடுக்கும் ஃபேஸ்புக்!

லைவ் ஆடியோ ரூம்ஸ் அம்சத்தை பயன்படுத்த கிரியேட்டர்களுக்கு பணம் கொடுக்கும் ஃபேஸ்புக்!

பேஸ்புக்

பேஸ்புக்

புதிய live audio அம்சத்தில் செக்ஷன்களை நடத்துவதற்கு இசைக்கலைஞர்கள் மற்றும் பிற பிரபலங்களுக்கு ஃபேஸ்புக் பல்லாயிரக்கணக்கான டாலர்களை வழங்கு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  • Share this:
சமீபத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் நிறுவிய ஃபேஸ்புக் நிறுவனம் ‘மெட்டா’ (Meta) என்று தன்னைத்தானே உருமாற்றி கொண்டது நமக்கு தெரியும். மெட்டா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் நிறுவனத்தின் அசல் நெறிமுறைகளில் மாற்றம் ஏற்படாமல் உள்ளது. சோஷியல் மீடியா உலகில் முதலிடத்தில் இருக்க என்னெவெல்லம் செய்ய முடியுமோ அதை அத்தனையும் செய்ய நிறுவனம் முடிவு செய்து அதற்கான திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

Meta (முன்பு Facebook) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த ஜூலை மாதம், வரும் 2022-ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 1 பில்லியன் டாலர் நிதியை கிரியேட்டர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்து இருந்தார். இதனிடையே சமீப காலமாக கிளப்ஹவுஸ் என்ற ஆடியோ சோஷியல் மீடியா ஆப் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

எனவே வருங்கால சவாலை கருத்தில் கொண்டு கிளப்ஹவுஸிற்கு போட்டியாக ஃபேஸ்புக், ஆடியோ ரூம் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல ஆடியோ சேட் App-ஆனா கிளப்ஹவுஸிற்கு போட்டியாக இயங்கும் லைவ் ஆடியோ ரூம்ஸ் அம்சத்தைப் பயன்படுத்த, மெட்டாவுக்குச் சொந்தமான ஃபேஸ்புக், கிரியேட்டர்களுக்கு 50,000 USD வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38 லட்சம்) நிதி செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய live audio அம்சத்தில் செக்ஷன்களை நடத்துவதற்கு இசைக்கலைஞர்கள் மற்றும் பிற பிரபலங்களுக்கு ஃபேஸ்புக் பல்லாயிரக்கணக்கான டாலர்களை வழங்கு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் Meta பிளாட்ஃபார்ம்களுக்குச் சொந்தமான ஃபேஸ்புக்கில் இருக்கும் சில ப்ரொடக்ஷன் கம்பெனிகள், சமீப நாட்களில் இசை கலைஞர்கள் மற்றும் சோஷியல் மீடியா ஸ்டார்களை தொடர்புகொண்டு Facebook Live Audio ரூம்களை பயன்படுத்தி கொள்ள பேமெண்ட் பேக்கேஜ்களை வழங்க முடிவு செய்திருப்பதாக கூறி, அவர்களிடம் பேசி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக The Information தனது அறிக்கையில் கூறி இருக்கிறது.

கூடுதலாக, Meta-வின் ஃபோட்டோ ஷேரிங் App-ஆன இன்ஸ்டா, தனது பிளாட்ஃபார்மில் ரீல்களை போஸ்ட் செய்யும் பிரபல கிரியேட்டர்களுக்கு 35,000 டாலர் வரை கட்டணம் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் தகவலும் வெளியாகி இருக்கிறது. அறிக்கைகளின்படி கூடுதலாக ஃபேஸ்புக் இப்போது இசைக்கலைஞர்கள் மற்றும் பிற கிரியேட்டர்களுக்கு அதன் லைவ் ஆடியோ ரூம் மூலம் ஒரு செஷனுக்கு $10,000 முதல் $50,000 வரை நிதி செலுத்த முன்வந்து உள்ளது.

Also read... நிறைய நேரம் சார்ஜ் இருக்கக் கூடிய பேட்டரி வசதி கொண்ட 5 ஸ்மார்ட்போன்கள்!

ஃபேஸ்புக் தன் தளத்தை பயன்படுத்தும் கிரியேட்டர்களுக்கு அதிக பணம் கொடுக்க தயாராக இருக்கும் அதே நேரத்தில், அந்த நிதியை பெற கிரியேட்டர்கள் குறைந்தது 30 நிமிட நேரத்திற்கும் 4 - 6 செஷன்கள் வரை நடத்த வேண்டும் என்றும் தகவல் தெரிவிக்கிறது. தற்போது லைவ் ஆடியோ செஷனில் 50 ஸ்பீக்கர்கள் வரை சேர்க்க Facebook அனுமதிக்கிறது. கேட்பவர்களின் (listener) எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்பதால் யார் வேண்டுமானாலும் Facebook-ல் எந்த லைவ் ஆடியோ ரூமிலும் சேரலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: