ரே-பான் நிறுவனத்துடன் இணைந்து AR ஸ்மார்ட் கிளாஸ் - அடுத்த ஹார்டுவேர் தயாரிப்பு குறித்து ஃபேஸ்புக் அறிவிப்பு!

பேஸ்புக்

ஃபேஸ்புக் மற்றும் ரே-பான் நிறுவனங்கள் இணைந்து உருவாக்க உள்ள பிராண்டட் கண்ணாடிகள் எதிர்காலம் சார்ந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்குவதற்கான முதல் படிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

  • Share this:
ஃபேஸ்புக்கின் வளர்ந்து வரும் வணிகம் டிஜிட்டல் விளம்பரங்கள் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் சிஇஓ-வான மார்க் ஜுக்கர்பெர்க், தங்களது அடுத்த தயாரிப்பு வெளியீடு ரே-பான் (Ray-Ban) நிறுவனத்துடன் இணைந்து உருவாக உள்ள ஒரு ஹார்ட்வேர் தயாரிப்பு என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள மார்க், ரே-பான் உரிமையாளர் எசிலர் லக்சோட்டிகாவுடன் இணைந்து உருவாக்கப்படும் ஸ்மார்ட் கிளாஸ்கள் தங்கள் நிறுவனத்திடமிருந்து வரும் அடுத்த தயாரிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். நிறுவனத்தின் Q2 2021 வருவாய் கூட்டத்தின் போது ஜுக்கர்பெர்க் இதை அறிவித்தார்.

நிறுவனத்தின் சமீபத்திய வருவாய் கூட்டத்தில் பேசிய மார்க் ஜுக்கர்பெர்க், "நம் அடுத்த தயாரிப்பு வெளியீடு எஸிலர் லக்சோட்டிகாவுடன் இணைந்து ரே-பானில் இருந்து நமது முதல் ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்த இருக்கிறோம். மேலும் ரே-பானுடன் இணைந்து வெளிவர உள்ள தங்கள் தயாரிப்பான ஸ்மார்ட் கண்ணாடிகள் சில அழகாக நேர்த்தியான விஷயங்களை செய்ய மக்களை அனுமதிக்கும் என்று கூறி உள்ளார். எனவே அவற்றை மக்களின் கைகளுக்கு கொண்டு சேர்க்க உள்ளத்தில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்தில் முழு வளர்ந்த ரியாலிட்டி கண்ணாடிகளை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து முன்னேற விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபேஸ்புக் மற்றும் ரே-பான் நிறுவனங்கள் இணைந்து உருவாக்க உள்ள பிராண்டட் கண்ணாடிகள் எதிர்காலம் சார்ந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்குவதற்கான முதல் படிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது இன்டர்நெட்டிலிருந்து டேட்டா அல்லது கிராபிக்ஸ் மூலம் உண்மையான உலகத்தை (real world) பெரிதாக்குகிறது. பிராங்கோ-இத்தாலிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட உள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை.

அதே போல இந்த ஸ்மார்ட் ஏஆர் கண்ணாடிகள் எப்போது தயாராகி வெளியாகும் என்பதற்கான காலக்கெடு எதையும் இந்த அறிவிப்பின் போது மார்க் ஜுக்கர்பெர்க் குறிப்பிடவில்லை. ரே-பானுடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ள ஸ்மார்ட் கண்ணாடிகளில் இன்டக்ரேடட் டிஸ்பிளே இருக்காது என்பதை பேஸ்புக் முன்பு உறுதிப்படுத்தியிருந்தாலும், மார்க் குறிப்பிட்டுள்ள “நேர்த்தியான விஷயங்கள்” என்னவென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ள ஸ்மார்ட் ஏஆர் கிளாஸ்கள் மூலம் வாய்ஸ் கால் செய்ய முடியுமா? ஸ்மார்ட் அசிஸ்டென்ட்டை அணுக முடியுமா என்பது பற்றிய தெளிவு இல்லை.

இன்டக்ரேடட் டிஸ்பிளே இல்லாமல் இருந்தாலும், அவை ஸ்னாப் ஸ்பெக்டாக்கிள்ஸ் அல்லது அமேசானின் எக்கோ பிரேம்களை போன்ற கட்டுப்பாடுகளுக்கான பேர்டு ஸ்மார்ட்போன் ஆப்-ஐ (paired smartphone app) சார்ந்திருக்க கூடும். இந்த மீட்டிங்கின் போது ஏஆர் மற்றும் விஆர் டெக்னலாஜிகளை பயன்படுத்தி யூஸர்கள் டிஜிட்டல் ஸ்பேஸிற்கு 'டெலிபோர்ட்' செய்யக்கூடிய ஒரு மெய்நிகர் 'மெட்டாவர்ஸை' (metaverse) உருவாக்குவது பற்றியும் அவர் பேசினார்.

Also read... ரஷ்யாவில் விதிமுறைகளை மீறிய Google - 41 ஆயிரம் டாலர் அபராதம்!

கூட்டத்தில் தொடர்ந்து பேசிய மார்க், வர்த்தகம் மற்றும் விளம்பரங்கள் எவ்வாறு வருவாயின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்பதையும் வலியுறுத்தினார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கண்ணாடி மட்டுமின்றி, 2 கேமராக்கள் மற்றும் ஹார்ட் ரேட் மானிட்டர் போன்ற அம்சங்களை ஒருங்கிணைக்கும் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகப்படுத்துவதிலும் ஃபேஸ்புக் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதில் 2 கேமராக்களில் ஒன்று வாட்ச்சின் முன்புறத்தில் வீடியோ அழைப்பிற்காக பொருத்தப்படும். அநேகமாக இந்த ஸ்மார்ட்வாட்ச் 2022-ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
First published: