செய்திக்காக புதியதொரு News Tab அம்சம்... அறிமுகம் செய்கிறது ஃபேஸ்புக்...!

ஃபேஸ்புக் News Tab குறித்தான அறிவிப்பை நேற்று ஃபேஸ்புக் சர்வதேச துணைத் தலைவர் கேம்பெல் ப்ரவுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

செய்திக்காக புதியதொரு News Tab அம்சம்... அறிமுகம் செய்கிறது ஃபேஸ்புக்...!
ஃபேஸ்புக்
  • News18
  • Last Updated: October 1, 2019, 3:29 PM IST
  • Share this:
ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக News Tab என்றதொரு அம்சத்தை இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்ய உள்ளது.

News Tab அம்சத்தின் கீழ் செய்திகளை வெளியிட குறிப்பிட்ட சில செய்தி நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஒப்பந்தமிடுகிறது. ஊடகங்களில் குறிப்பிட்ட பிரபல நிறுவனங்களுக்கு மட்டும் பணம் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் மொபைல் ஆப்-ன் கீழ் பகுதியில் இந்த News Tab இடம்பெறும். அக்டோபர் இறுதிக்குள் சுமார் 200 பதிப்பாளர்கள் உடன் இந்த Tab செயல்பாட்டுக்கு வரும்.

பல செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், பிசினஸ் இன்சைடர், பஸ்ஃபீட், ஹஃப் போஸ்ட் ஆகிய சர்வதேச செய்தி நிறுவனங்களின் செய்திகள் News Tab-ல் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கானதாக உள்ளது.


தேசிய அளவில் பிரபலமான செய்தி நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் லைசென்ஸ் கட்டணமாகவும் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு இதைவிட குறைவான கட்டணமும் விதிக்கப்பட உள்ளது. ஃபேஸ்புக் வழங்கும் விதிமுறைகளுக்கு உட்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் அளிக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் News Tab குறித்தான அறிவிப்பை நேற்று ஃபேஸ்புக் சர்வதேச துணைத் தலைவர் கேம்பெல் ப்ரவுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும் பார்க்க: 2 பேட்டரி, 6 கேமிரா என கிறுகிறுக்க வைக்கும் விலையில் சாம்சங் கேலக்ஸி Fold!ஒரே பாட்டு ஓகோன்னு புகழ்... புள்ளிங்கோ புகழ் ஸ்டீபன்
First published: October 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்