பேஸ்புக்கில் பரவும் அவதூறு கருத்துக்களை தவிர்க்க புதிய திட்டம் விரைவில் அறிமுகம்

பேஸ்புக்கில் பரவும் அவதூறு கருத்துக்களை தவிர்க்க புதிய திட்டம் விரைவில் அறிமுகம்

பேஸ்புக்

ஜார்ஜ் பிளாய்ட் என்ற அமெரிக்க கறுப்பின மனிதர் உயிரிழந்த நேரத்தில் அவர் குறித்து பல்வேறு அவதூறுகள் பேஸ்புக்கில் உலா வந்தது. இதனால் கோகோ கோலா மற்றும் ஸ்டார்பக்ஸ் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜூலை மாதம் பேஸ்புக்கை புறக்கணித்தன.

  • Share this:
ஃபேஸ்புக், உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு சமூக வலைத்தளமாகும். ஆனால் பேஸ்புக் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அதனால் பிரச்சனைகளை சரிசெய்ய புதிய அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் 'topic exclusion controls' என்ற புதிய அம்சத்தை பேஸ்புக் உருவாக்கி வருகிறது. விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பரங்களுடன் தோன்றும் சில வகையான கருத்துக்களை/ கன்டென்ட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்த இந்த திட்டத்தை தொடங்குகிறது ஃபேஸ்புக்.

ஜார்ஜ் பிளாய்ட் என்ற அமெரிக்க கறுப்பின மனிதர் உயிரிழந்த நேரத்தில் அவர் குறித்து பல்வேறு அவதூறுகள் பேஸ்புக்கில் உலா வந்தது. இதனால் கோகோ கோலா மற்றும் ஸ்டார்பக்ஸ் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜூலை மாதம் பேஸ்புக்கை புறக்கணித்தன. வெறுக்கத்தக்க பேச்சு, போலி செய்திகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் கமெண்ட்ஸ்களுடன் விளம்பரங்கள் தோன்றுவதைத் தடுக்க பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் மிகக் குறைவான பாதுகாப்பை நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றன என பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

பேஸ்புக்


இதனிடையே யூ-டியூப், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை நெறிமுறைப்படுத்தவும், தணிக்கை செய்யவும் ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அப்போது யூ-டியூப், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுக்கான தணிக்கையை தாங்களே மேற்கொள்ள வேண்டும் எனவும் புகார்கள் ஏதேனும் வந்தால் தான் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யூ-டியூப், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அனுப்பியுள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில், பேஸ்புக் மற்றும் யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகியவை தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை ஆன்லைனில் கட்டுப்படுத்த பெரிய விளம்பரதாரர்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'டாபிக்ஸ் எக்ஸ்லூசன் கண்ட்ரோல்' திட்டம், பேஸ்புக் செய்தி ஊட்டத்தில் விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பரங்கள் எவ்வாறு காண்பிக்க வேண்டும் என்பதை வரையறுக்க உதவும் என கூறப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய குழு விளம்பரதாரர்களுடன் சோதனை செய்யப்படும் என்றும் இந்த செயல்முறை முடிவடைய ஒரு வருடம் ஆகும் என்றும் பேஸ்புக் நிறுவனம் விளக்கியுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: