வன்முறை பதிவுகளை எச்சரிக்கும் பேஸ்புக்! - அமெரிக்காவில் சோதனை

பேஸ்புக்

அமெரிக்காவில் அதிபர் பைடன் வெற்றியை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய மிகப்பெரிய கலவரத்துக்கும் முகநூல் மீது குற்றம்சாட்டப்பட்டது.

  • Share this:
உலகளவில் அதிகம் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனமாக இருக்கும் பேஸ்புக், பல்வேறு சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. வன்முறை மற்றும் தீவிரவாதம் தொடர்பான தகவல்கள் பதிவிடப்படுவதாகவும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஆபாசப் பதிவுகள் அதிகரிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது. தவறான பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும், ஆபாச பதிவுகளை உடனே அடையாளும் காணும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களால் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

குறிப்பாக, நியூசிலாந்தில் கிறிஸ்டர்சர்ச் பகுதியில் இருக்கும் தேவாலயத்துக்குள் நுழைந்த தீவிரவாதி ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த கொடூர சம்பவத்தை அவர் தனது முகநூலில் நேரலையாக ஒளிபரப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தீவிரவாத தாக்குதல்களை நேரடியாக ஒளிபரப்பும் செய்யும் அளவுக்கு பேஸ்புக் பக்கம் இருப்பதாகவும், இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுதந்தன.

பேஸ்புக் தனது தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றும், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் அல்லது வன்முறைக்கு வித்திடும் தகவல்கள் பதிவிடப்படுவதை உடனடியாக அடையாளம் கண்டு நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ALSO READ | ட்விட்டரை தொடர்ந்து தவறான தகவல்களை flag செய்ய பேஸ்புக் வெளியிட்ட புதிய அம்சம்!!

இந்த நேரத்தில் அமெரிக்காவில் அதிபர் பைடன் வெற்றியை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய மிகப்பெரிய கலவரத்துக்கும் முகநூல் மீது குற்றம்சாட்டப்பட்டது. வன்முறை தொடர்பான தகவல்கள் ஏற்கனவே பகிரப்பட்டிருப்பதை முகநூல் கண்டுகொள்ளவில்லை, வன்முறைக்கு வித்திடும் பதிவுகளை அகற்றாதது ஏன்? உள்ளிட்ட பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Facebook Drops Like Button

இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளான அமெரிக்க கேப்பிட்டல் அலுவலகம் தொடர்பான வன்முறை பதிவுகளை நீக்கிய முகநூல் நிறுவனம், வன்முறை தொடர்பான பதிவுகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு யூசர்களுக்கு எச்சரிப்பது தொடர்பான பாப் மெசேஜ் உருவாக்கத்தில் கவனம் செலுத்தியது. தற்போது அமெரிக்காவில் சோதனை முறையில் இந்த பாப் அப் மெசேஜ் யூசர்களுக்கு காண்பிக்கப்படுகிறது.

ALSO READ | உங்கள் பேஸ்புக் ப்ரொஃபைலை லாக்செய்வது எப்படி?

டிவிட்டரில் வெளியாகியுள்ள புகைப்படத்தில் ’நீங்கள் வன்முறை தொடர்பான புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்’ என கூறுகிறது. அடுத்தடுத்த பதிவுகளில், உங்களுக்கு தெரிந்த ஒருவர் தீவிரவாதியாக மாறுவதை நினைத்து கவலை கொள்கிறீர்களா? என்றும், அண்மையில் நீங்கள் தீவிரவாதம் தொடர்பான செய்திகளை படித்திருக்கிறீர்கள் என்ற பாப்-அப் மெசேஜ் காண்பிக்கப்படுகிறது. இதன் மூலம் யூசர்கள் மற்றும் வன்முறை தகவல்கள் பகிருபவர்கள் இருவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் என பேஸ்புக் கூறியுள்ளது. தாங்கள் படிக்கும் கன்டென்ட் குறித்த தெளிவு யூசர்களுக்கு இந்த எச்சரிக்கை மெசேஜ்கள் மூலம் கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ALSO READ |  யாரெல்லாம் உங்கள் Facebook -ஐ பார்த்தவர்கள்? இதோ டிப்ஸ்!

பேஸ்புக் செய்தித்தொடர்பாளர் தங்களின் முன்னெடுப்பு குறித்து விளக்கியுள்ள பதிவில், "பேஸ்புக் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்காது. உலகளவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சிக்கு பேஸ்புக் துணை நிற்கும். வன்முறை மற்றும் தீவிரவாத பதிவுகளை அடையாளம் கண்டு நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதனுடைய தொடக்கமே இப்போது பேஸ்புக் கொண்டு வந்திருக்கும் பாப்-அப் மெசேஜ் எச்சரிக்கை. வரும் காலங்களில் இதனை மேம்படுத்துவதற்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 
Published by:Sankaravadivoo G
First published: