இன்ஸ்டாகிராம் வழியைப் பின்பற்றி புது ஆப்ஷனை அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக்..!

ஃபேஸ்புக்-ன் நிறுவனமான இன்ஸ்டாகிராமில் லைக் எண்ணிக்கையை மறைக்கும் ஆப்ஷன் ஆறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

Web Desk | news18
Updated: September 4, 2019, 5:50 PM IST
இன்ஸ்டாகிராம் வழியைப் பின்பற்றி புது ஆப்ஷனை அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக்..!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: September 4, 2019, 5:50 PM IST
ஃபேஸ்புக் போஸ்ட் ஒவ்வொன்றுக்கும் கிடைக்கும் ‘லைக்’ எண்ணிக்கையை பயனாளர்கள் மறைக்கும் வகையிலான ஆப்ஷன் ஒன்றை அறிமுகப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கிலும் ‘லைக்’ எண்ணிக்கையை மறைக்கும் வகையிலான ஆப்ஷனைக் கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது. ஆப் ஆய்வாளரான ஜேன் மன்சூன் ஃபேஸ்புக்கின் ஆண்ட்ராய்டு ஆப் மூலம் இதற்கான கோட் ஒன்றைக் கண்டறிந்துள்ளார்.

லைக் எண்ணிக்கையை மறைப்பதற்கான சோதனை முயற்சி நடைமுறையில் இருப்பதாகவும் ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்-ன் நிறுவனமான இன்ஸ்டாகிராமில் லைக் எண்ணிக்கையை மறைக்கும் ஆப்ஷன் ஆறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது. அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே இன்ஸ்டாகிராம் லைக் மறைக்கும் ஆப்ஷன் செயல்படுத்தப்பட்டுள்ளது.


”பயனாளர்கள் தங்களுக்கு எவ்வளவு லைக் கிடைக்கிறது என்று அறிந்து மன வேதனை அடைவதைத் தவிர்க்கவே இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது” என்கிறார் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரி.

மேலும் பார்க்க: 19 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது நோக்கியா 3310... நாளை வெளியீடு?

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவில் உற்சாக வரவேற்பு

Loading...

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...