2.9 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன: ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

 • News18
 • Last Updated :
 • Share this:
  சமூக ஊடகங்களில் உலகளவில் பெரும்பாலான மக்களால் ஃபேஸ் புக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 2.9 கோடி ஃபேஸ் புக் பயனாளர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம், ஹேக்கர்கள் புதிய பக் மூலமாக தகவல்கள் திருடுவதாக கூறியுள்ளது. இதில், 1.5 கோடி பயனாளர்களின் பெயர் மற்றும் மெயில் ஐடி குறித்தான தகவல்கள் திருடப்பட்டுள்ளன. 1.4 கோடி பயனாளர்களின் பெயர், பாலினம், ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் , மதம், இருக்குமிடம் போன்ற தகவல்கள் திருடப்பட்டுள்ளது.

  ஹேக்கர்கள் 50 மில்லியன் பயனாளர்கள் கணக்குகளை டிஜிட்டல் பதிவு குறியீடு மூலம் திருடியுள்ளதாக கூறியுள்ளது. 5 கோடி பயனளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 2.9 கோடி மக்களின் தகவல்கள் மட்டுமே திருடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.  மேலும், 3 கோடி பயனாளர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஃபேஸ்புக் நிறுவனமே மெசேஜ் அனுப்பி ஹேக்கர்ஸ்களால் திருடப்பட்ட தகவல்கள் என்ன என்பதையும் மேலும் தங்களின் ஃபேஸ் புக் பக்கத்தை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவிக்கவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

  சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் தகவல்கள் திருடப்பட்டது குறித்து மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் மீண்டும் ஃபேஸ்புக் நிறுவனம் தகவல்களை பாதுகாப்பதில் ஹேக்கர்களிடம் மீண்டும் தோல்வி அடைந்துள்ளது.
  Published by:Saroja
  First published: