• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் 'மெட்டா' என மாற்றம்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் 'மெட்டா' என மாற்றம்

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

பேஸ்புக் சமூக வலைதளத்தின் பெயர் மெட்டா (META) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது

  • Share this:
    ஃபேஸ்புக்'கின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிய பெயராக மெட்டா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

    சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் 'ஃபேஸ்புக்கை, உலகம் முழுவதும் மொத்தம் 285 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 'பேஸ்புக்' ஆண்டு கூட்டத்தின்போது பேசிய அதன் நிறுவனர் MARK ZUCKERBERG, ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை 'மெட்டா' என மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டதாகவும், அதனைக் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது என்றும் கூறினார். அதேநேரம், தங்களது செயலிகள், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை என்று விளக்கமளித்தார். அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான 'மெட்டாவெர்ஸ்' நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகக் கூறிய ஜுக்கர்பெர்க், இதில், அடுத்த 10 ஆண்டுகளில் பல கோடி பயனாளர்கள் இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலும், அமெரிக்க பங்கு சந்தையில் ஃபேஸ்புக்கின் குறியீடு எம்.வி.ஆர்.எஸ் என மாற்றப்படுவதாகவும், இது டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் மட்டுமே 'மெட்டா' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆப்களின் பெயரில் எந்த மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: