• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • "கோவிட் தடுப்பூசிகள் மனிதர்களை சிம்பன்ஸிகளாக மாற்றும்" தவறாக செய்தி பரப்பிய 300 கணக்குகளை நீக்கிய பேஸ்புக்!

"கோவிட் தடுப்பூசிகள் மனிதர்களை சிம்பன்ஸிகளாக மாற்றும்" தவறாக செய்தி பரப்பிய 300 கணக்குகளை நீக்கிய பேஸ்புக்!

சிம்பன்ஸி

சிம்பன்ஸி

தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல் பரப்பிய விஷயத்தில் 300 கணக்குகளை பேஸ்புக் தடை செய்துள்ளது.

  • Share this:
ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகிய தடுப்பூசிகள் மக்களை சிம்பன்ஸிகளாக மாற்றும் என்று வதந்தி பரப்பிய நூற்றுக்கணக்கான கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. இந்த கணக்குகள் அனைத்தும் ரஷ்யன் மிஸ்இன்பர்மேஷன் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட கணக்குகள் எனவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

கணக்குகள் நீக்கப்பட்ட விஷயத்தை கடந்த வெள்ளிக்கிழமை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நெட்வொர்க் ரஷ்யாவில் உருவானது மற்றும் முக்கியமாக இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவில் உள்ள மக்களை குறிவைத்து செய்தி பரப்புவதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கைகளின்படி, தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல் பரப்பிய விஷயத்தில் 300 கணக்குகளை பேஸ்புக் தடை செய்துள்ளது. அஸ்ட்ராஜெனேகா கோவிட் -19 தடுப்பூசி மக்களை சிம்பன்ஸிகளாக மாற்றும் என்றும், மேலும் தடுப்பூசி செயலற்றதாகிவிட்டது என்றும் கூறி, கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தவறான தகவல்களை மீம்ஸ் மற்றும் கருத்துக்களாக இந்த நெட்வொர்க் ஆரம்பத்தில் வெளியிட்டது. இருப்பினும், ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு நெட்வொர்க் மே 2021 இல் மீண்டும் தவறான தகவலை பரப்ப தொடங்கியது. இந்த முறை ஃபைசர் தடுப்பூசியின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியது.

ALSO READ |  பஹாரி பசுக்களின் ஜீன்களை பரப்ப திட்டம்! ஹிமாச்சலப்பிரதேச அரசு முடிவு

இது குறித்து குளோபல் IO அச்சுறுத்தல் நுண்ணறிவு முன்னணி மற்றும் பேஸ்புக்கில் உள்ள IO அச்சுறுத்தல் புலனாய்வு தலைவர் பென் நிம்மோ ஒரு அறிக்கையில் தெரிவித்ததாவது, "வெளிநாட்டு தலையீட்டிற்கு எதிரான எங்கள் கொள்கையை மீறியதற்காக 65 பேஸ்புக் கணக்குகள் மற்றும் 243 இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாங்கள் அகற்றிவிட்டோம். இது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் சார்பாக முறையற்ற நடத்தையை ஒருங்கிணைத்த செயல்முறையாகும்.

இந்த நெட்வொர்க் ஒரு டஜன் தளங்கள் மற்றும் ஃபோரம்களை இயக்கியுள்ளது. ஆனால் பார்வையாளர்களை உருவாக்க முடியவில்லை. எங்கள் விசாரணையில் இந்த பிரச்சாரத்திற்கும் Fazze-க்கும் இடையே தொடர்பு உள்ளது. எனவே ஃபேஸ் இப்போது எங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது, ”என்று தெரிவித்துள்ளது.

ALSO READ | ஜியோ - பேஸ்புக் கூட்டணி... முழுமையான டிஜிட்டல் வியாபாரத்தை சிறு வணிகர்கள் எதிர்பார்க்கலாம்

மேலும், ஃபேஸ்புக் விசாரணைக் குழு கூறியதாவது, கோவிட் எதிர்ப்பு தடுப்பூசி பிரச்சாரம் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட மார்க்கெட்டிங் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஃபேஸுடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகள் முதன்மையாக ரஷ்யாவில் இருந்து நடத்தப்பட்டன என்று பேஸ்புக் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட "ஒருங்கிணைந்த இயல்பற்ற நடத்தை அறிக்கை"-யில் குறிப்பிட்டுள்ளது.

தவறான தகவல் பரவிய இந்த இருமுறையும் லத்தீன் அமெரிக்கா, இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட பல அரசாங்கங்கள், அந்தந்த தடுப்பூசிகளுக்கான அவசர அங்கீகாரங்களைப் பற்றி விவாதித்ததாகக் கூறப்படுகிறது என்றும் நிம்மோ கூறியுள்ளார். மேலும், Reddit, Medium, Change [.] Org, மற்றும் Medapply [.] Co [.] Uk உட்பட பல ஃபோரம்களில் தவறான கட்டுரைகள் மற்றும் மனுக்களை உருவாக்கியது என்று ஃபேஸ்புக் விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அது பின்னர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளைப் பயன்படுத்தி பரப்பியுள்ளது.

ALSO READ | உங்கள் பேஸ்புக் ப்ரொஃபைலை லாக்செய்வது எப்படி?
 

இருப்பினும், இந்த பிரச்சாரம் இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டிக்டாக் ஆகியவற்றில் முன்பே இருக்கும் பார்வையாளர்களுடன் இன்ப்பிளுயன்ஸர்களை பயன்படுத்தி பதிவுகளின் உண்மை தோற்றத்தை வெளிப்படுத்தாமல் குறிப்பிட்ட ஹேஷ்டேக்குகளை நோக்கமாகக் கொண்டு பரப்பப்பட்டது. அறிக்கைகளின்படி, தவறான தகவலை பரப்ப போலி கணக்குகளைப் ரஷ்யன் நிறுவனம் பயன்படுத்தியது. அவற்றில் சில பேஸ்புக் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள கணக்குகளில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஃபேஸ்புக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "எங்கள் குழுக்கள் உலகெங்கிலும் ஏமாற்றும் பிரச்சாரங்களைக் கண்டறிந்து அகற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றன. அவை வெளிநாட்டு அல்லது உள்நாட்டு பிரசாரங்களாக இருக்கலாம். எங்கள் அமலாக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் இன்ப்ளூயன்ஸர்களின் செயல்பாடுகள் உருவாகி வருவதை நாங்கள் அறிவோம், ”என்று தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: