போலி பக்கங்கள், குழுக்கள் மற்றும் கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்..!

உக்ரைன் நாட்டில் தேர்தல் வருவதையொட்டி அங்கு போலியான பல கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.

Web Desk | news18
Updated: July 26, 2019, 3:12 PM IST
போலி பக்கங்கள், குழுக்கள் மற்றும் கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்..!
மாதிரிப்படம் (Reuters)
Web Desk | news18
Updated: July 26, 2019, 3:12 PM IST
போலியான அடையாளங்களுடன் செயல்படும் பக்கங்கள், குழுக்கள் மற்றும் கணக்குகளை மொத்தமாக அகற்றியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

ஃபேஸ்புக் பக்கங்களில் இருந்து மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்தும் போலி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. தாய்லாந்து, ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஹோண்டூராஸ் ஆகிய நாடுகளில் அதிகக் களையெடுப்பு நடந்துள்ளது. தாய்லாந்தில் உருவாக்கப்பட்ட கணக்கிலிருந்து அமெரிக்காவில் செயல்பட்டு வரும் கணக்குகளும் பக்கங்களும் கூட நீக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஃபேஸ்புக் சைபர் செக்யூரிட்டி தலைவர் நதானியல் க்ளெய்சர் கூறுகையில், “போலி கணக்குகள் மூலம் தவறான தகவல்களைப் பரப்புதல், தவறான வழிகாட்டுதல்களை தருதல் ஆகிய பக்கங்கள் கவனிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டில் தேர்தல் வருவதையொட்டி அங்கு போலியான பல கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.


ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு உக்ரைன் குறித்துப் பேசும் 83 ஃபேஸ்புக் கணக்குகள், 2 பக்கங்கள், 29 குழுக்கள், 5 இன்ஸ்டாகிராம் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. ஹோண்டூராஸில் அதிகப்பட்சமாக 181 கணக்குகள், 1,488 ஃபேஸ்புக் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: இனி ‘கூகுள் ஃபோட்டோஸ்’-க்குப் பதிலாக இலகுவான ‘கேலரி கோ’..!
First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...