Home » News » Technology » FACEBOOK RELEASES NEW FEATURES FOR A FUN FILLED VIRTUAL DIWALI EXPERIENCE VIN GHTA

வேடிக்கை நிறைந்த விர்ச்சுவல் தீபாவளி அனுபவத்திற்காக புதிய அம்சங்களை வெளியிடும் பேஸ்புக்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேஸ்புக் சமீபத்தில் பல புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.

வேடிக்கை நிறைந்த விர்ச்சுவல் தீபாவளி அனுபவத்திற்காக புதிய அம்சங்களை வெளியிடும் பேஸ்புக்!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: November 13, 2020, 4:44 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே விர்ச்சுவல் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தீர்வு காண வேண்டியிருக்கும். அந்த வகையில் புதிய தீபாவளி-தீம்டு அவதாரங்களுடன் புதிய அம்சத்தை பேஸ்புக் வெளியிடவுள்ளது. இதன் மூலம் தீபாவளி பண்டிகையின் போது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை வேடிக்கையான சவால்களில் பங்கேற்க ஊக்குவிக்கும் வாய்ப்பையும், ஆன்லைனில் பண்டிகை உற்சாகத்தை பரப்புவதையும் பேஸ்புக் நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்தவகையில் பேஸ்புக் அறிமுகப்படுத்திய அம்சங்கள் குறித்து காண்போம்.

வீட்டிலேயே தீபாவளி:

இந்த புதிய அம்சங்கள் தீபாவளி கொண்டாடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு  #DiwaliAtHomeChallenge என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பகிர்ந்து கொள்ள சவால் விடும். இதேபோல, ஒளி விளக்குகள், மெழுகுவர்த்தி வைத்திருப்பவர்கள், தீபங்கள் மற்றும் விளக்குகளை எவ்வாறு மறுசுழற்சி செய்கிறீர்கள் என்பதற்கான DIY வீடியோவை உருவாக்கலாம். மேலும் #DIYDiwaliChallenge-ஐப் பயன்படுத்தி தீபாவளி தொடர்பான DIY திட்டங்களைப் பகிர்ந்து கொள்ள உங்கள் நண்பர்களுக்கு சவால் விடலாம்.


இதுகுறித்து தனது மின்னஞ்சல் அறிக்கையில் பேஸ்புக் குறிப்பிட்டுள்ளதாவது, “நீங்கள் ஒரு புதிய பேஸ்புக் பதிவினை உருவாக்கச் செல்லும்போது,‘challenge’ என்ற ஆங்கில வார்த்தையில் முடிவடையும் ஒரு ஹேஷ்டேக்கை உள்ளிட்டு ஒரு சவாலைத் தொடங்கலாம். அல்லது உங்கள் செய்தி இடுகைகளில் வேறொரு சவால் பதிவினை நீங்கள் பார்க்கும் போது “Try It” பட்டனை அழுத்தி சவால்களை ஏற்று செய்யலாம். உங்கள் சவால்களுக்கு புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேர்க்கவும். இந்த பண்டிகை காலத்தை பதிவிடவும் முடியும். அதில் உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் டேக் செய்வதன் மூலம் பண்டிகையை வேடிக்கையாக கொண்டாட அவர்களிடம் நீங்கள் பரிந்துரைக்கலாம்" என குறிப்பிட்டுள்ளது.

Also read... இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் ஸ்டோரியை ரீபோஸ்ட் செய்வது எப்படி?



உங்கள் அவதாரை அலங்கரிக்கலாம்:குறுகிய வடிவ உரை பதிவுகளுக்கு தீபாவளி தீம்டு அவதாரங்களின் பின்னணியை பேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது. தீம்களுடன் பொருந்த உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட அவதாரத்துடன் வண்ணமயமான பின்னணி ஒன்றின் மீது உங்கள் சொந்த வார்த்தைகளை எந்த மொழியிலும் டைப் செய்யலாம். இந்த அம்சத்தைப் பயன்படுத்த, உங்கள் தொலைபேசியிலிருந்து அவதாரத்தை உருவாக்கி, Android அல்லது IOS இல் “Create Post” கம்போஸருக்கு செல்லவும். அதில் “Background Colour" என்பதைக் கிளிக் செய்து தீபாவளி பின்னணியைத் தேர்ந்தெடுக்கவும். மேலும் பேஸ்புக்கில் தீபாவளி குறித்த உள்ளடக்கத்தைப் பின்பற்ற #ShubhDiwali2020 மற்றும் #Diwali2020 ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
First published: November 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories