Home /News /technology /

ஹேக்கர்களிடமிருந்து ஃபேஸ்புக் அக்கவுண்ட்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் Facebook Protect

ஹேக்கர்களிடமிருந்து ஃபேஸ்புக் அக்கவுண்ட்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் Facebook Protect

Facebook

Facebook

இதுவரை ஆபத்தில் உள்ள 1.5 மில்லியனுக்கும் அதிகமான அக்கவுண்ட்கள் இந்த Facebook Protect அம்சத்தை ஆக்டிவேட் செய்துள்ளதாக ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு தலைவர் கூறி இருக்கிறார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
அதிக ஆபத்துள்ள யூஸர்களின் ஃபேஸ்புக் அக்கவுண்ட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் செக்யூரிட்டியை வழங்கும் ஒரு திட்டமான Facebook Protect, இப்போது இந்தியா உட்பட பல நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஃபேஸ்புக் ப்ரொடெக்ட் (Facebook Protect) இந்தியா உட்பட 50 நாடுகளுக்கு விரிவடையும் என கூறப்பட்டு இருக்கிறது. Facebook Protect என்பது சைபர் கிரிமினல்களால் அதிக ஆபத்தில் உள்ள யூஸர்களின் அக்கவுண்ட்களை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.

இந்த திட்டமே இப்போது இந்தியா உட்பட பல முக்கிய நாட்டு யூஸர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் தவிர மேலும் பல காரணிகளால் அதிக ஆபத்து இருப்பதாக கருதப்படும் யூஸர்களுக்கும் இந்த Facebook Protect திட்டம் கூடுதல் பாதுகாப்பை வழங்கும். முதன் முதலாக இந்த திட்டம் கடந்த 2018-ல் அமெரிக்காவில் சோதிக்கப்பட்டது. பின்னர் 2020-ல் நடைபெற்ற அமெரிக்கத் தேர்தல்களின் போது பரவலாக விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா உட்பட கிட்டத்தட்ட 50 நாடுகளுக்கு Facebook Protect-ஐ விரிவுபடுத்த Meta நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Facebook Protect அம்சம் என்பது ஹேக்கர்கள் அல்லது பிற சட்டவிரோத அச்சுறுத்தல்களால் அதிகம் குறிவைக்கப்படும் நபர்களுக்கான பாதுகாப்பு திட்டமாகும். அதிக ஆபத்தில் இருக்கும் யூஸர்கள் அதாவது ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய துறைகளின் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் ஃபேஸ்புக் அக்கவுண்ட்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும்.

Also read:  இனி வாட்ஸ் அப் மூலம், Uber app பயன்படுத்தாமலேயே Cab-ஐ புக் செய்யலாம் - புதிய வசதி

Facebook Protect பற்றி பேசி இருக்கும் ஃபேஸ்புக்கின் பாதுகாப்புத் தலைவர் (Head of Security) நதானியேல் க்ளீச்சர் (Nathaniel Gleicher), மேற்காணும் குழுக்களில் இருக்கும் யூஸர்கள், இந்த அம்சத்தை turn on செய்ய கூறும் நிறுவனத்தின் அறிவிப்பை காண்பார்கள். Facebook Protect அம்சம் ஆக்டிவேட் செய்யப்படும் அக்கவுண்ட்ஸ்கள் two-factor authentication-ஐ (2FA) பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தும், மேலும் கூடுதல் பாதுகாப்பிற்காக அந்த அக்கவுண்ட்டை ஃபேஸ்புக் கண்காணிக்கும் என்றார்.

பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சைபர் அட்டாக்ஸ்களுக்கு இலக்காகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவர்களுக்கான Facebook Protect பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்துவதாக Meta தெரிவித்துள்ளது. சைபர் தாக்குதல்களுக்கு எதிராக ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ள Facebook Protect அம்சம் ஆக்டிவேட் செய்யப்பட்டால், வேறு டிவைஸில் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை அணுக SMS மூலமாகவோ அல்லது மூன்றாம் தரப்பு அங்கீகரிப்பு ஆப் (third-party authenticator app) மூலமாகவோ OTP தேவைப்படும்.

Also read:   திடீரென குறைந்த ட்விட்டர் ஃபாலோயர்ஸ்... குழம்பிய யூஸர்கள்.. காரணம் இதுதான்!

மேலும் பேசிய க்ளீச்சர், இந்த Facebook Protect-ன் கீழ் வரும் அக்கவுண்ட்கள் எங்கள் சிஸ்டம்களுக்குள் flagged செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, எங்கள் புலனாய்வாளர்கள் (investigators) Facebook Protect-ல் உள்ள அக்கவுண்ட் ஒன்று மீண்டும் மீண்டும் டார்கெட் செய்யப்படுவதை கண்டால் அவை ஆபத்தில் இருக்கலாம் என்பதை அறிந்து கொள்வோம் என்று விளக்கி உள்ளார். இதுவரை ஆபத்தில் உள்ள 1.5 மில்லியனுக்கும் அதிகமான அக்கவுண்ட்கள் இந்த Facebook Protect அம்சத்தை ஆக்டிவேட் செய்துள்ளதாக ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு தலைவர் கூறி இருக்கிறார்.

 
Published by:Arun
First published:

Tags: Facebook

அடுத்த செய்தி