• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஆயிரக்கணக்கான சென்சிடிவ் விளம்பர-இலக்கு விருப்பங்களை நீக்க முடிவு: பேஸ்புக் அறிவிப்பு!

ஆயிரக்கணக்கான சென்சிடிவ் விளம்பர-இலக்கு விருப்பங்களை நீக்க முடிவு: பேஸ்புக் அறிவிப்பு!

பேஸ்புக்

பேஸ்புக்

பேஸ்புக்கின் வடிவமைக்கப்பட்ட விளம்பர திறன்கள், அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் சமூக பிரச்சினையை உருவாகும் குழுக்கள் மற்றும் வணிகங்கள் உட்பட பரந்த அளவிலான விளம்பரதாரர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

  • Share this:
இனம், உடல்நலம், மத நடைமுறைகள், அரசியல் நம்பிக்கைகள் அல்லது பாலியல் நோக்குநிலை போன்ற உள்ளடக்கங்களுடன் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்ட விளம்பரங்கள் போன்ற "சென்சிட்டிவான" தலைப்புகளுடன் வரும் விரிவான விளம்பர-இலக்கு விருப்பங்களை அகற்ற திட்டமிட்டிருப்பதாக Facebook Inc நிறுவனம் கடந்த செவ்வாயன்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் தனது பெயரை மெட்டா என மாற்றிய பேஸ்புக் நிறுவனம், டிஜிட்டல் விளம்பரம் மூலம் தனது வருவாயில் பெரும்பகுதியை ஈட்டி வருகிறது.

மேலும், சமீபத்திய ஆண்டுகளாக நிறுவனம் தனது விளம்பர-இலக்கு திறன்கள் மற்றும் விதிகளை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் தனது வலைப்பதிவு இடுகையில் குறிப்பிட்டுள்ளதாவது, "நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு", "உலக நீரிழிவு தினம்", "LGBT கலாச்சாரம்", "யூத விடுமுறைகள்" அல்லது அரசியல் நம்பிக்கைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் போன்ற அனுமதிக்கப்படாத விளம்பரங்கள் இலக்குகளாக வைக்கப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் சில எடுத்துக்காட்டுகளை வழங்கியது.

மேலும் இந்த மாற்றம் 2022ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி முதல் நடைபெறும் என்று கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட குழுக்களுக்கு எதிராக விளம்பரதாரர்கள் பாகுபாடு காட்டுவது அல்லது குறிவைப்பது போன்ற துஷ்பிரயோகங்கள் உட்பட, அதன் மைக்ரோ-இலக்கு திறன்களைச் சுற்றிய விமர்சனங்களால் நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கின் வடிவமைக்கப்பட்ட விளம்பர திறன்கள், அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் சமூக பிரச்சினையை உருவாகும் குழுக்கள் மற்றும் வணிகங்கள் உட்பட பரந்த அளவிலான விளம்பரதாரர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இது தொடர்பாக நிறுவனத்தின் விளம்பரங்களுக்கான தயாரிப்பு சந்தைப்படுத்தல் துறையின் துணைத் தலைவர் கிரஹாம் மட் கூறியதாவது, "குறைந்த பிரதிநிதித்துவ குழுக்களில் உள்ளவர்களுக்கு எதிர்மறையான அனுபவங்களை ஏற்படுத்தும் வழிகளில் இது போன்ற இலக்கு விருப்பங்கள் பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்களிடமிருந்து வந்த விமர்சனங்களை நாங்கள் பதிவுசெய்துள்ளோம்" என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து பேசிய மட், "இந்த விரிவான இலக்கு விருப்பங்களை அகற்றுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இந்த மாற்றம் சில வணிகங்கள் மற்றும் நிறுவனங்களை எதிர்மறையாக பாதிக்கலாம் என்பதை நாங்கள் அறிவோம்," என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் சென்சிட்டிவான விளம்பர தொடர்புகளை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

Also read... மொபைலில் இன்டர்நெட் இல்லாமலே வாட்ஸ்அப் செயலியை உங்கள் லேப்டாப்பில் எப்படி பயன்படுத்துவது?

ஏனெனில் Facebook இன் தளங்களில் உள்ள விளம்பரதாரர்கள் இன்னும் இருப்பிடத்தின் அடிப்படையில் பார்வையாளர்களை குறிவைக்கலாம். அவர்களின் சொந்த வாடிக்கையாளர் பட்டியலைப் பயன்படுத்தலாம். மேலும், அவர்களின் உள்ளடக்கத்தில் ஈடுபட்டுள்ள கஸ்டம்டு பார்வையாளர்களை அடையலாம் காண்பதோடு மற்றும் அந்த பயனர்களுக்கு ஒரே மாதிரியான குணாதிசயங்களைக் கொண்டவர்களுக்கு விளம்பரங்களை அனுப்பலாம் என்று நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

தற்போது, அரசியல் மற்றும் ஆல்கஹால் போன்ற தலைப்புகள் தொடர்பான குறைவான விளம்பரங்களைப் பார்க்க பயனர்களை அனுமதிக்கும் நிறுவனம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சூதாட்டம் மற்றும் எடை இழப்பு பற்றிய விளம்பரங்கள் உட்பட, மக்கள் பார்க்கும் விளம்பரங்களின் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டுவர இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: