Home /News /technology /

ட்விட்டர் வழியில் பேஸ்புக், NFT அறிமுகம் செய்ய திட்டம்... அது என்ன NFT?

ட்விட்டர் வழியில் பேஸ்புக், NFT அறிமுகம் செய்ய திட்டம்... அது என்ன NFT?

ட்விட்டர் வழியில் பேஸ்புக், NFT அறிமுகம் செய்ய திட்டம்

ட்விட்டர் வழியில் பேஸ்புக், NFT அறிமுகம் செய்ய திட்டம்

என்.எப்.டி என்றால் உலகில் உள்ள அசல் கலைப் பொருட்களுக்கு டிஜிட்டல் வடிவில் கொடுக்கப்படும் டோக்கன்.

டிஜிட்டல் உலகத்தின் அபார வளர்ச்சி மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் விரிவாக்கத்தால் என்.எப்.டி (Non Fungible Tokens - NFT) டோக்கன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. என்.எப்.டி டோக்கன்கள் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கெட்டில் இருந்தபோதிலும், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவற்றின் வளர்ச்சி அசுரவேகத்தில் உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் என்.எப்.டிக்களுக்கான மார்க்கெட் அதிகரித்து வருவதால், மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களும் என்.எப்.டி மீது பார்வை விழுந்தது. இதனையடுத்து, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு டிஜிட்டல் தளங்கள் என்.எப்.டிக்கு மாறத் தொடங்கினர். அதில் லேட்டஸ்டாக பேஸ்புக்கும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ப்ளூம்பெர்க்கிற்கு பேட்டியளித்த பேஸ்புக் நிர்வாகி டேவிட் மார்கஸ், என்.எப்.டி குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, தங்களுக்கு சாத்தியமாகக்கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். தற்போது பேஸ்புக் மார்க்கெட் நல்ல நிலையில் இருப்பதால், வளர்ந்து வரும் மார்க்கெட்டில் கால்பதிப்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என விளக்கமளித்துள்ளார்.

என்.எப்.டி (NFT) என்றால் என்ன?

என்.எப்.டி என்றால் உலகில் உள்ள அசல் கலைப் பொருட்களுக்கு டிஜிட்டல் வடிவில் கொடுக்கப்படும் டோக்கன். மியூசிக், பாடல், வீடியோ, காயின், டிவிட்டர் பதிவு உள்ளிட்ட எதுவாக இருந்தாலும், அவற்றின் அசல் பொருட்களுக்கு கொடுக்கப்படும் காப்புரிமை. இதைப்போன்று இன்னொன்று இருக்க முடியாத கலை வடிவங்களுக்கு கிரிப்டோகரன்சி வடிவிலான valuble asset உரிமம் கொடுக்கப்படுகிறது. அந்த அசல் பொருளின் காப்புரிமையை பெறுவதன் மூலம், ஒருவர் அந்தப் படைப்புகளை மீண்டும் ஏலம் விட்டு நல்ல விலைக்கு விற்கலாம்.

Also Read : ஸ்மார்ட்போன்கள் எளிதில் தீப்பிடிப்பதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கிறது - என்னென்ன தெரியுமா?

அந்த கலைப்படைப்புகளை வாங்குபவர்கள் பிற்காலத்தில் இன்னும் நல்ல விலைக்கு விற்க முடியும். குறிப்பிட்ட கலை படைப்பை பயன்படுத்த வேண்டும் என்றால், அந்த டோக்கனை வைத்திருப்பவருக்கு காப்புரிமைத் தொகை மற்றும் அனுமதியை பெற வேண்டும். இதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். டிஜிட்டல் வடிவில் பிட்காயின் போன்று இருக்கும் இந்த டோக்கன் பெற்றிருக்கும் கலைப்படைப்பை யாரும் நகல் எடுக்க முடியாதபடிக்கு உயர் தொழில் நுட்பத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

என்.எப்.டி டோக்கன் உதாரணங்கள்

டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சியின் முதல் டிவீட் 2.9 மில்லியனுக்கு NFT மூலம் விற்பனை செய்யப்பட்டது. அண்மையில், Disadter Girl என அழைக்கப்படும் ஜோஸ் ரோத் என்ற சிறுமி தனது புகைப்படத்தை NFT ஏலம் மூலம் 3,70,52,697 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார். கடந்த 2005 ஆம் ஆண்டில் வீடு ஒன்று எரிந்து கொண்டிருக்கும்போது, அந்த வீட்டின் முன்பு சிரித்தவாறு ஜோஸ் ரோத் இருக்கிறார். அவரது தந்தையால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், அந்தப் புகைப்படத்தை NFT மூலம் விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனத்துக்கும், கடனை அடைப்பதற்காகவும் பயன்படுத்தினார். டிக் டாக்கும் NFT-யில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதல் ஆஸ்கார் நாமினேஷன் லிஸ்ட் முதல் பல்வேறு விந்தையான அசல் Copy, NFT ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Also Read : ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் போன்களுக்கு ரூ.9,000 வரை தள்ளுபடி அறிவிப்பு!

அண்மையில், 140 என்.எப்டிக்களை டிவிட்டர் நிறுவனம் சுமார் 5 மில்லியன் அமெரிக்கன் டாலருக்கு விற்பனை செய்து நிதி திரட்டியது. என்.எப்.டி உரிமைகோரும் நடைமுறை மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து வருகிறது. கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி மட்டுமே இந்த ஏலத்தில் பங்குபெற முடியும் என்பதால், இந்தியாவில் இந்த முறை வருவதற்கு சாத்தியமில்லை என கூறப்படுகிறது. ஏனென்றால், கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் தடை உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published:

Tags: Facebook, Twitter

அடுத்த செய்தி