ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

எலானை மிஞ்சிய மார்க் -மெட்டா நிறுவனத்தில் இருந்து 11,000 ஊழியர்கள் நீக்கம்-அதிரடி அறிவிப்பு

எலானை மிஞ்சிய மார்க் -மெட்டா நிறுவனத்தில் இருந்து 11,000 ஊழியர்கள் நீக்கம்-அதிரடி அறிவிப்பு

மெட்டா நிறுவனம்

மெட்டா நிறுவனம்

Meta layoff : வேலைக்கு ஆட்களை எடுப்பதை மெட்டா நிறுத்திவைத்துள்ள நிலையில், இதனை நீட்டிப்பதாகவும் மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, Indiaamericaamerica

  11,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க போவதாக மெட்டா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

  ட்விட்டர் நிறுவனத்தை  தன்வசப்படுத்திய எலான் மஸ்க், ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறார்.  இந்தியாவில் செயல்பட்டு வரும் ட்விட்டரின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு தப்பவில்லை.

  இந்நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு அதிரடியாக ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் இன்க் புதன்கிழமை ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கும் என்று தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் செவ்வாயன்று நூற்றுக்கணக்கான நிர்வாகிகளிடம் கூறியுள்ளதாகவும் நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு தானே பொறுப்பு என்று தெரிவித்துள்ளதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டிருந்தது.

  தற்போது, வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையிலும் செலவை குறைக்கும் விதமாகவும்  11,000 ஊழியர்களை நீக்கப் போவதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  “மெட்டாவின் வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான சில மாற்றங்களை இன்று பகிர்கிறேன். எங்கள் குழுவின் அளவை சுமார் 13% குறைக்கவும், 11,000 க்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளேன்” என்று மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

  மேலும் வேலைக்கு ஆட்களை எடுப்பதை அந்நிறுவனம் நிறுத்திவைத்துள்ள நிலையில், இதனை நீட்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  தனது முடிவு தொடர்பாக, ‘இது அனைவருக்கும் கடினமானது என்பதை நான் அறிவேன், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வருந்துகிறேன்’ எனவும் அவர் கூறியுள்ளார்.  பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு 16 வாரங்களுக்கான அடிப்படை ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்றும் மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Facebook, Mark zuckerberg