புதிய லோகோ அறிமுகம் செய்துள்ள ஃபேஸ்புக்..!

ஆப் மற்றும் நிறுவனத்துக்கு இடையே வேறுபாட்டை காண்பிக்கும் வகையில் இந்தப் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டிருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

புதிய லோகோ அறிமுகம் செய்துள்ள ஃபேஸ்புக்..!
ஃபேஸ்புக் லோகோ
  • News18
  • Last Updated: November 5, 2019, 4:16 PM IST
  • Share this:
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகிய செயலிகளுக்கெல்லாம் தலைமை நிறுவனமாக உள்ள ஃபேஸ்புக் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் புதிய லோகோ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஆப் மற்றும் நிறுவனத்துக்கு இடையே வேறுபாட்டை காண்பிக்கும் வகையில் இந்தப் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டிருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் ஃபேஸ்புக் ஆப், மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஆக்யூலஸ், வொர்க்ப்ளேஸ், போர்டல் மற்றும் கேலிப்ரா ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

“மக்களுக்கும் தொழில் பார்டனர்களுக்கும் தெளிவை ஏற்படுத்தும் வகையிலும் எங்களது சேவையை வெளிப்படுத்தவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என தலைமை மார்கெட்டிங் அதிகாரி ஆண்டனியோ லூசியோ தெரிவித்துள்ளார்.


ஃபேஸ்புக் தனது ப்ராண்ட் மதிப்பை அதிகரிக்கவே இத்தகையை புதிய மாற்றத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதாம்.

மேலும் பார்க்க: 15 ஆயிரம் ரூபாய்க்குள் உங்களுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இதோ!

கண்ணாடி அணிவதற்கும் கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கும் உள்ள வித்தியாசம்?
First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading