இன்று முதல் வெளியானது ஃபேஸ்புக் நியூஸ்..!

வணிகம், பொழுதுபோக்கு, அறிவியல், தொழில்நுட்பம், ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் செய்திகள் வெளியாகும்.

இன்று முதல் வெளியானது ஃபேஸ்புக் நியூஸ்..!
ஃபேஸ்புக்
  • News18
  • Last Updated: October 25, 2019, 6:34 PM IST
  • Share this:
ஃபேஸ்புக் நியூஸ் சேவை இன்று முதல் வெளியாகி உள்ளது.

முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் ஃபேஸ்புக் நியூஸ் சேவை வெளியிடப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்தின் முடிவுகளைப் பொறுத்து இதர நாடுகளுக்கும் இந்த அம்சம் விரிவாக்கப்பட உள்ளது. ஃபேஸ்புக் நியூஸ் தளத்தில் பதிப்பகங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை.

ஆனால், யூஎஸ்ஏ டுடே, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், டைம், தி வாஷிங்டன் போஸ்ட், பஸ்ஃபீட் நியூஸ் ஆகிய பதிப்பாளர்கள் இணைந்திருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. செய்தித்தளத்தில் அப்டேட் ஆகும்போது ஃபேஸ்புக் நியூஸ் ஃபீட் தொடர்ந்து அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும்.


ஆப்பிள் போன்று ஃபேஸ்புக் நியூஸ் செக்‌ஷன் மனிதர்களால் மேனுவலாகவே இயக்கப்பட உள்ளது. ‘Today’s Stories’ என்ற ஆப்ஷன் மூலம் பயனாளர்கள் உடனுக்குடனான செய்திகளைக் காண முடியும். பயனாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த செய்தி வகைகள் ஃபீடில் அப்டேட் ஆகும் என்கிறார் ஃபேஸ்புக் தயாரிப்பு மேலாளர் கேம்ப்பெல் ப்ரவுன்.

வணிகம், பொழுதுபோக்கு, அறிவியல், தொழில்நுட்பம், ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் செய்திகள் வெளியாகும்.

மேலும் பார்க்க: இந்த 17 ஆப்ஸ் உங்கள் ஐபோனில் இருந்தால் டெலிட் செய்துவிடவும்..!பிகில் சிறப்புக் காட்சி திரையிடல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
First published: October 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்