Home /News /technology /

Facebook: முதல்முறையாக பேஸ்புக் நிறுவனத்துக்கு இப்படி ஒரு சரிவு!!

Facebook: முதல்முறையாக பேஸ்புக் நிறுவனத்துக்கு இப்படி ஒரு சரிவு!!

Facebook

Facebook

Facebook Meta: ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரையிலும் இந்த நிறுவனம் சரிவு பாதையில் சென்றதே கிடையாது

    தினசரி நாம் காலையில் எழுந்து டீ, காபி அருந்துவது போன்ற அன்றாட பணிகளை செய்ய தொடங்குகிறோமோ, இல்லையோ வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை எட்டிப் பார்க்காமல் அன்றைய பொழுது தொடங்காது.

    அதிலும், பலர் இரவு தூங்கும் நேரம் வரையிலும் ஃபேஸ்புக்கில் ஆன்லைனில் இருப்பார்கள். அந்த அளவுக்கு எல்லோரது வாழ்விலும் நீங்க முடியாத இடம் பிடித்துவிட்ட இந்த தளத்திலும், தினசரி பயனாளர்களின் வருகை முதல் முறையாக குறைய தொடங்கியுள்ளதாம். சொன்னால் நம்பும்படியாக இல்லை என்றாலும் கூட, அதிகாரப்பூர்வமான புள்ளி விவரங்கள் இதைத்தான் உறுதி செய்கின்றன.

    இதற்கு முந்தைய காலாண்டில் ஃபேஸ்புக்கின் தினசரி பயனாளர்களின் வருகை நாளொன்றுக்கு 1.930 பில்லியனாக இருந்த நிலையில், தற்போதைய காலாண்டில் அது 1.929 பில்லியனாக சரிந்துள்ளது. ஃபேஸ்புக் செயலியானது மெடா பிளாட்பார்ம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஆப்பிள் ஃபோன்களில் பிரைவேசி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதன் காரணமாகவும், டிக் டாக் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களின் பயனாளர்கள் அதிகரித்ததன் காரணமாகவும் தினசரி பயனாளர் வருகை குறைந்துள்ளது என்று மெடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Also read:  காரின் உட்பகுதி டாய்லெட் சீட்டை விட அசுத்தமானது - ஷாக்கிங் ரிப்போர்ட்!

    ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரையிலும் இந்த நிறுவனம் சரிவு பாதையில் சென்றதே கிடையாது என்ற நிலையில், முதல் முறையாக அந்நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளன.

    டிக்டாக் மற்றும் கூகுள் நிறுவனத்தின் யூ-டியூப் போன்ற தளங்கள் காரணமாக ஃபேஸ்புக் வருபவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியிருக்கிறது. இதனால், அடுத்த காலாண்டில் அந்நிறுவனத்திற்கான வருவாய் சற்று குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மெடா நிறுவனத்தின் பங்குகள் மட்டுமல்லாமல் டிவிட்டர், ஸ்னேப், பின்டெரெஸ்ட் போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் குறைந்துள்ளன.

    Also read:  எலெக்ட்ரிக் பைக்குகளை தவணை முறையில் எளிதாக வாங்கலாம் - Hero Electric நிறுவனத்தின் அட்டகாச திட்டம்.

    உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் நிறுவனமான கூகுளுக்கு, அடுத்தபடியாக இரண்டாவது டிஜிட்டல் நிறுவனமாக மெடா ஃபேஸ்புக் நிறுவனம் இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் தங்கள் பயனாளர்களின் தனி விவரங்களை மற்ற நிறுவனங்கள் ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப விளம்பரங்கள் வெளியிடப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் பிரைவேசி விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இதனால், அடுத்த காலாண்டில் மெடா நிறுவனத்தின் விளம்பர வருவாய் பாதிக்கப்படும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சோஷியல் மீடியா ஏஜென்ஸி ஆன்லைன் என்ற நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பிளைன் சாகர் கூறுகையில், “மெடா நிறுவனத்தில் முதலீடு செய்வதும், அதன் பங்குகளை வாங்குவதும், தங்கள் விளம்பரத்துக்கான முதலீடு அல்ல என்பதை உணர தொடங்கி விட்டனர். மெடா நிறுவனத்தில் இன்றைக்கு முதலீடு செய்வது என்பது, அந்நிறுவனத்தின் பெயர் மெடாவர்ஸ் என்று மாறிய பிறகு, வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் என நம்புவதற்கு சமம் ஆகும்’’ என்று தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: Facebook

    அடுத்த செய்தி