அறிமுகத்துக்கு முன்னரே எதிர்ப்பை சம்பாதிக்கும் ஃபேஸ்புக் க்ரிப்டோகரன்ஸி!

நிதி தீவிரவாதத்துக்கு ‘லிப்ரா’ வழிவகை செய்யக்கூடாது என்றும் சர்வதேச அளவில் எதிர்க்குரல் எழுந்து வருகிறது.

Web Desk | news18
Updated: June 19, 2019, 1:11 PM IST
அறிமுகத்துக்கு முன்னரே எதிர்ப்பை சம்பாதிக்கும் ஃபேஸ்புக் க்ரிப்டோகரன்ஸி!
ஃபேஸ்புக் கரன்ஸி
Web Desk | news18
Updated: June 19, 2019, 1:11 PM IST
ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்ய உள்ள ‘லிப்ரா’ என்னும் க்ரிப்டோகரன்ஸிக்கு, சர்வதேச நிதி ஒழுங்குமுறையின் கீழ் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் நெட்வொர்க்கிங் துறைக்கு அடுத்தபடியாக ஆன்லைன் வர்த்தகம், பணப்பரிமாற்ற தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்குள் கால்பதிக்க முயன்று வருகிறது. இதற்காக வருகிற 2020-ம் ஆண்டு ‘லிப்ரா’ என்னும் க்ரிப்டோகரன்ஸியை அறிமுகப்படுத்த உள்ளதாக ஃபேஸ்புக் அறிவித்தது.

இதுபோன்ற டிஜிட்டல் கரன்ஸியை தனியார் அறிமுகம் செய்தால் இது பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. பிரெஞ்சு நிதி அமைச்சர் ப்ருனோ லீ மேர், “இதுபோன்ற நாணயங்களை அரசுதான் வெளியிட முடியும். லிப்ரா வாடிக்கையாளர்களை எந்த விதத்திலும் காயப்படுத்தாமலும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்காமலும் இருக்குமென ஃபேஸ்புக் உறுதியளிக்க வேண்டும்” என்றார்.


மேலும், நிதி தீவிரவாதத்துக்கு ‘லிப்ரா’ வழிவகை செய்யக்கூடாது என்றும் சர்வதேச அளவில் எதிர்க்குரல் எழுந்து வருகின்றன. ஆன்லைன் பணப்பரிமாற்றம், ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றுக்கு உபயோகம் அளிக்கும் வகையில் ‘லிப்ரா’ என்னும் டிஜிட்டல் கரன்ஸி உபேர், விசா, மாஸ்டர்கார்டு மற்றும் பேபால் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 2020-ல் அறிமுகமாகிறது.

மேலும் பார்க்க: 2020-ல் அறிமுகமாகிறது ஃபேஸ்புக் க்ரிப்டோகரன்ஸி ‘லிப்ரா’!
First published: June 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...