Home /News /technology /

"ரே-பான் ஸ்டோரீஸ்" ஸ்மார்ட் கிளாசஸை அறிமுகப்படுத்தியது ஃபேஸ்புக் - முழு விவரம்!

"ரே-பான் ஸ்டோரீஸ்" ஸ்மார்ட் கிளாசஸை அறிமுகப்படுத்தியது ஃபேஸ்புக் - முழு விவரம்!

Ray ban

Ray ban

இந்த ரே-பான் ஸ்டோரீஸ் கண்ணாடிகள் அமெரிக்க விலையில் $ 299 டாலர்களில் இருந்து தொடங்குகின்றன

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே பேஸ்புக் நிறுவனம் "ரே-பான் ஸ்டோரீஸ்" என்று பெயரிடப்பட்ட ஸ்மார்ட் கிளாஸசை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை உபயோகிப்போர் ஸ்மார்ட்போனின் உதவி இல்லாமலேயே புகைப்படம் எடுக்கவும், வீடியோக்களை பதிவு செய்யவும், இசை கேட்கவும் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவும் முடியும். ரே-பானின் தாய் நிறுவனமான EssilorLuxottica என்ற ஐரோப்பிய கண்ணாடிக் கூட்டு நிறுவனத்துடன் இணைந்து பேஸ்புக் தொழில்நுட்ப நிறுவனமானது இந்த ஸ்மார்ட் கிளாஸசை உருவாகியுள்ளது.

இரு நிறுவனங்களின் பல ஆண்டு கூட்டாண்மையிலிருந்து வெளிவந்த முதல் தயாரிப்பு தான் இந்த ஸ்மார்ட் கிளாசஸ். இதன் அம்சத்தை பொறுத்தவரை, ரே-பான் ஸ்டோரீஸில் டூயல் இன்டகிரேடட் 5 MB கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை உயர்-தெளிவுத்திறன் அடிப்படையில் புகைப்படங்களைப் எடுக்கவும் 30 வினாடிகள் வரை வீடியோக்களைப் பதிவு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கிளாசஸ்களை அணிந்து கொண்டவர்கள் கிளாசில் இருக்கும் பட்டனை அழுத்துவதன் மூலமும், அல்லது பேஸ்புக் வாய்ஸ் கமாண்ட்கள் மூலமும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ முறையில் கண்ணாடிகளை செயல்படுத்தலாம்.

அதாவது, இந்த கிளாஸசை பயன்படுத்தும் மக்கள் தங்கள் கைகளை பயன்படுத்தாமலேயே, "ஹே பேஸ்புக்" என்று கூறி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆட்டோமேடிக்காக எடுக்கலாம். இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளின் வலது புறத்தில் இருக்கும் கேமராவை ஒட்டி ஒரு வெள்ளை எல்இடி பொருத்தப்பட்டுள்ளது. கண்ணாடியை அணிந்தவர்கள் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும்போது இது அருகில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தும்.

இதுதவிர ஸ்ட்ரீம்லைன்டு, ஓபன்-இயர் ஸ்பீக்கர்கள், அழைப்புகள் மற்றும் வீடியோக்களுக்கான குரல் மற்றும் ஒலி பரிமாற்றத்தை வழங்க மூன்று மைக்ரோஃபோன் ஆடியோ வரிசை போன்ற அம்சங்களையும் இந்த கிளாசஸ் பெற்றுள்ளது. கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ரே-பான் நிறுவனத்தின் கூற்றுப்படி, பீம்ஃபார்மிங் தொழில்நுட்பம் மற்றும் பின்னணி இரைச்சல் அடக்க அல்காரிதம் ஆகியவை மேம்பட்ட அழைப்பு அனுபவத்தை யூசர்களுக்கு வழங்கும் என்று கூறப்படுகிறது.

Ray ban


இந்த ஸ்மார்ட் கிளாசஸ் ஃபேஸ்புக் வியூ செயலியுடன் இணைக்கப்பட்டிருக்கும். ரே-பான் ஸ்டோரீஸ்களை பயன்படுத்துபவர்கள் அதன் மூலம் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொலைபேசியில் உள்ள மற்ற ஆப்களுக்கு இம்போர்ட் செய்ய இந்த ஃபேஸ்புக் வியூ ஆப் தேவைப்படும். மேலும் புகைப்படத்தை எடிட் செய்வதையும், ஷேர் செய்வதையும் இது எளிதாக்குகிறது. அதன்படி ஸ்மார்ட் கிளாசஸ் எடுத்த போட்டோக்களை தொலைபேசியின் கேமரா ரோலில் சேமிப்பதன் மூலம் அதை எடிட் மற்றும் ஷேர் செய்யலாம்.

Also Read:   மஹிந்திரா தார் எஸ்யூவியில் ஸ்டண்ட்.. சிக்கலில் யூடியூபர்கள்

இந்த ரே-பான் ஸ்டோரீஸ் கண்ணாடிகள் அமெரிக்க விலையில் $ 299 டாலர்களில் இருந்து தொடங்குகின்றன. இது இந்திய விலையில் தோராயமாக ₹ 22,000 இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் கிளாசஸ் 20 வேரியண்ட்டுகளில் வருகின்றன. அதன்படி, கிளாசிக் ரே-பான் கண்ணாடிகள் வேஃபேரர், வேஃபேர் லார்ஜ், ரவுண்ட் மற்றும் மெட்டியோர் உள்ளிட்ட ஸ்டைல்கள் மற்றும் ஐந்து வண்ணங்கள் அடிப்படையில் கிளியர், சன், ட்ரான்சிஷன் மற்றும் பெர்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்ட லென்ஸ் வகைகளில் வருகிறது என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட் கிளாசஸ் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இத்தாலி, அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published:

Tags: Facebook

அடுத்த செய்தி