• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • டிவிட்டர், கிளப்ஹவுஸ் வரிசையில் பேஸ்புக் - புதிய அப்டேட் விரைவில் அறிமுகம்!

டிவிட்டர், கிளப்ஹவுஸ் வரிசையில் பேஸ்புக் - புதிய அப்டேட் விரைவில் அறிமுகம்!

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

சீனாவுடனான எல்லைப் பகுதி மோதலுக்குப் பிறகு, டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டதால் அதனைப் போலவே உருவாக்கப்பட்ட மற்ற செயலிகள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
டிவிட்டர், கிளப்ஹவுஸ் வரிசையில் இணையவழியில் நேரலை குழு உரையாடலை மேற்கொள்ளும் செயலியை பேஸ்புக் நிறுவனமும் உருவாக்கி வருகிறது.

குறுகிய வடிவிலான வீடியோ ப்ளாட்பார்ம் கொடிகட்டிப் பறந்த நிலையில், தற்போது சமூகவலைதளங்களில் ஆடியோ ப்ளாட்பார்ம் பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது. டிக்டாக் உள்ளிட்ட வீடியோ தளங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக, இந்தியாவில் டிக் டாக் பயனாளர்கள் இல்லை என்ற சூழல் கூட உருவானது. சீனாவுடனான எல்லைப் பகுதி மோதலுக்குப் பிறகு, டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டதால் அதனைப் போலவே உருவாக்கப்பட்ட மற்ற செயலிகள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தற்போது சமூகவலைதளங்களில் ஆடியோ தளம் டிரெண்டிங்காக மாறியுள்ளது.

வீடியோ தளங்களுக்கு சில கட்டுப்பாடுகளும், கருத்து சொல்பவரின் அடையாளமும் அறிந்து கொள்ளப்படும் நிலை இருப்பதால், நெட்டிசன்களின் பார்வை ஆடியோ தளங்கள் மீது திரும்பியிருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கிளப் ஹவுஸ் என்ற இணைய வழி ஆடியோ தளம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு முக்கிய காரணம், இந்த செயலியில் ஆன்லைனில் லைவ்வாக மட்டுமே உரையாட முடியும். பிடிக்கும் தலைப்புகளில் நடைபெறும் உரையாடலில் பங்கேற்கலாம். உரையாடல் முடிந்தவுடன் தங்களின் தரவுகளும் அந்த செயலியில் இருக்காது. கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பலரும் நினைக்கும் நிலையில், இந்த செயலியின் வருகைக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

Also read... தவறாக லோகோ அச்சிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ ரூ .2 லட்சத்துக்கு விற்பனை!

இந்த செயலியின் ஆன்லைன் உரையாடலில் பலரும் பங்கேற்றனர். கிளப் ஹவுஸ் ஆடியோ தளம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதை உணர்ந்த டிவிட்டர் போன்ற மற்ற பெரிய சமூக வலைதள நிறுவனங்களும் தங்களுடைய தளத்தில் ஆடியோ செயலியை இணைக்க முடிவு செய்தனர். அதன்படி, டிவிட்டர் தளம் டிவிட்டர் ஸ்பேஸ் என்ற செயலியை உருவாக்கி டிவிட்டர் செயலியுடன் இணைத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் புதிய ஆடியோ தளத்தை லிங்டு இன் (Linkend In) -ல் இணைக்க முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், டெக் ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனமும் ஆடியோ தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் நேரடியாக குரல்வழி உரையாடலில் பங்கேற்கும் வாய்ப்பை விரைவில் தங்களது யூசர்களுக்கு வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளில் கோடிக்கணக்கான யூசர்களை கொண்டிருக்கும் பேஸ்புக் நிறுவனம், ஆடியோ செயலியை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி சமூகவலைதள சந்தையில் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த உள்ளது.

கிளப் ஹவுஸ் செயலி தற்போது ஐ.ஓ.எஸ் பார்மேட்டில் மட்டுமே இருப்பதால் ஆன்டிராய்டு யூசர்கள் அந்த செயலியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை உணர்ந்த பேஸ்புக், அன்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் தனது செயலி உருவாக்கத்தை முன்னெடுத்துள்ளது. கன்டெட் கிரியேட்டர்ஸ் பணம் சம்பாதிக்கும் வகையில் தங்களது படைப்பு இருக்கும் என்றும் பேஸ்புக் கூறியுள்ளது. அதேநேரத்தில், ஆடியோ தளத்தில் குதித்துள்ள பேஸ்புக் நிறுவனத்துக்கு அமெரிக்கா டெக் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மற்ற நிறுவனங்களின் ஐடியாக்களை பேஸ்புக் நிறுவனம் திருடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: