• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஃபேஸ்புக், ட்விட்டர், அமேசான் - மக்களின் நம்பிக்கையை இழந்த டாப் 3 வலைதளங்கள்!

ஃபேஸ்புக், ட்விட்டர், அமேசான் - மக்களின் நம்பிக்கையை இழந்த டாப் 3 வலைதளங்கள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஃபேஸ்புக் மீது பயனாளர்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என சர்வே கூறுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பயனாளர்களின் நம்பகத்தன்மையை இழந்த வலைதளங்களில் ஃபேஸ்புக் முதலிடம் பெற்றுள்ளது.

டொலுனா என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் பயனாளர்களின் நம்பகத்தன்மையை இழந்த இணையதளங்கள் குறித்த ஒரு சர்வே நடத்தியது. அதில், ஃபேஸ்புக் முதலிடம் பெற்றுள்ளது. பயனாளர்கள் தங்கள் சுய தகவல்களை வெளியிடத் தயங்கும் அளவுக்கு ஃபேஸ்புக்கின் தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என இந்த சர்வே தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்-க்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் ட்விட்டரும் மூன்றாம் இடத்தில் அமேசான் தளமும் உள்ளது. ஃபேஸ்புக் மீது நம்பிக்கை இல்லை என 40% மக்கள் வாக்களித்துள்ளார்கள். இதேபோல், 8% பயனாளர்கள் தான் ட்விட்டர் மீது நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளனர். அமேசானைப் பொறுத்தவரையில் சேவையில் குளறுபடி, போலிகளின் ஆக்கிரமிப்பு எனப் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்காக அமேசானும் பல விதிமுறைகளை கொண்டு வந்துகொண்டே உள்ளது.

ஆனால், பயனாளர்களின் மொத்த நம்பிக்கையையும் பெற்று எந்தவொரு குறைகளும் பதிவு செய்யப்படாத சிறந்த தளமாக நெட்ஃப்ளிக்ஸ் உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தை வெறும் 0.9% பேர் மட்டுமே குறை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பார்க்க: தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: