Home » News » Technology » FACEBOOK IS MAKING AN OS SINCE IT DOES NOT TRUST GOOGLE RA

சொந்தமாக OS உருவாக்கும் ஃபேஸ்புக்... கூகுள் மீது நம்பிக்கை இல்லையாம்..!

கூடுதலாக ஃபேஸ்புக் நிறுவனம் augmented reality கண்ணாடிகளை வடிவமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாம்.

சொந்தமாக OS உருவாக்கும் ஃபேஸ்புக்... கூகுள் மீது நம்பிக்கை இல்லையாம்..!
ஃபேஸ்புக்
  • News18
  • Last Updated: December 20, 2019, 4:51 PM IST
  • Share this:
ஃபேஸ்புக் நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளுக்கு ஏற்ற வகையில் சொந்தமாக OS ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளதாம்.

கூகுள் ஆண்ட்ராய்டு OS (Operation System | இயங்குதளம்) மீது மட்டும் சார்ந்து செயல்படாமல் சொந்தமாக ஒரு OS உருவாக்கும் பணியில் ஃபேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இப்பணியில் மார்க் லூக்கோவ்ஸ்கி ஈடுபட்டுள்ளார். இவரது தலைமையிலேயே ஃபேஸ்புக் நிறுவனத்துக்கான பிரத்யேக OS தயாராகி வருகிறதாம்.

மார்க் லூக்கோவ்ஸ்கி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூத்த ஊழியர் ஆவார். விண்டோஸ் NT OS உருவாக்கத்தில் பெரும் பங்கு இவருடையது. தற்போது இவர்தான் ஃபேஸ்புக்குக்கான OS பணியில் ஈடுபட்டு உள்ளார். எந்த விதமான ஹார்டுவேர் மற்றும் சாதனங்கள் அல்லது சாஃப்ட்வேர் தளங்களுக்கு ஏற்றதாக வடிவமைப்பு இருக்கும் என எவ்வித தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை.


கூடுதலாக ஃபேஸ்புக் நிறுவனம் augmented reality கண்ணாடிகளை வடிவமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாம். augmented reality என்பது கூகுள் ஸ்கை மேப்-க்கு உதவும் தொழில்நுட்பம் போன்றதொரு தொழில்நுட்பம் ஆகும். விரைவில் அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட், ஆப்பிள் சிரி ஆகியவற்றுக்குப் போட்டியாக வளரும் எண்ணமும் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் உள்ளதாம்.

மேலும் பார்க்க: கூகுளில் முழு நேர பணியாளருக்கான வேலைவாய்ப்பு... இந்தியாவுக்கு முன்னுரிமை..!
First published: December 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading