Home /News /technology /

அக்டோபர் முதல் தன்னுடைய முக்கிய சேவையை நிறுத்துவதாக தெரிவித்த பேஸ்புக்: இதுதான் காரணம்!

அக்டோபர் முதல் தன்னுடைய முக்கிய சேவையை நிறுத்துவதாக தெரிவித்த பேஸ்புக்: இதுதான் காரணம்!

Facebook

Facebook

Facebook | நம்முடைய பேஸ்புக் கணக்கை போலவே அந்த உள்ளூர் பகுதிக்கென தனியாக புதிய ஒரு கணக்கை துவக்கி அதன் மூலம் அந்த “நெய்பர்ஹூட்” வழங்கும் சேவைகளை பெறவும் அந்தப் பகுதியில் உள்ள மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் தன்னுடைய புதிய சேவையான நெய்பர் “ஹூட்” எனப்படும் உள்ளூர் பகுதிகளில் இருப்பவர்களை ஒன்றிணைக்கும் வசதியை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது

    சமூக வலைத்தளமான பேஸ்புக் நாளுக்கு நாள் புதிய வசதிகளையும், புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக பேஸ்புக் நிறுவனர் அதன் பெயரை மெட்டா என்று பெயர் மாற்றம் செய்ததிலிருந்தே பேஸ்புக்கில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் மெட்டா நிறுவனம் தன்னுடைய சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் தன்னுடைய புதிய சேவைகளின் ஒன்றான நெய்பர் ஹூட் எனப்படும் அம்சத்தினை சமீபத்தில் அறிமுகபடுத்தியது.

    இதன் மூலம் உள்ளூர்வாசிகளை அந்த பகுதியில் உள்ள மற்றவர்களுடன் இணைக்கவும் தன்னுடைய பகுதியைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள பல வசதிகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் தற்போது அந்த வசதியை பேஸ்புக் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. முதலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையானது அதிகமானோரால் விரும்பப்பட்டது.

    Read More : 'எனக்கும் எடிட் ஆக்ஸஸ் கொடுங்களேன்' - ட்விட்டரிடம் குசும்பு செய்த கூகுள் இந்தியா...


    இதில் நம்முடைய பேஸ்புக் கணக்கை போலவே அந்த உள்ளூர் பகுதிக்கென தனியாக புதிய ஒரு கணக்கை துவக்கி அதன் மூலம் அந்த “நெய்பர்ஹூட்” வழங்கும் சேவைகளை பெறவும் அந்தப் பகுதியில் உள்ள மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும்.

    முதலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என பார்க்கப்பட்ட இந்த சேவையானது அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. ஆனால் ஒருவேளை வரும் காலங்களில் இந்த சேவையை அதிகம் பேர் பயன்படுத்தினாலும் அந்த நிறுவனத்திற்கு இதனால் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியோ அல்லது வருமானமோ கிடைப்பதற்கு இல்லை என்பதால் தான் இந்த வசதியை நிறுத்துகிறார்கள் என்பது போலவும் தகவல்கள் கசிந்துள்ளன.

    ஒரு வகையில் அது உண்மையும் கூட. ஏனெனில் தற்போது அந்நிறுவனம் தன்னுடைய தேவையற்ற செலவுகள் அனைத்தையும் குறைத்துக் கொண்டு வருகிறது நெய்பர் ஹூட் சேவையானது நிறுத்தப்படும் பட்சத்தில் அந்நிறுவனத்திற்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

    ஒருவேளை இந்த சேவையை அந்நிறுவனம் தொடர்ந்து கொடுக்குமானால் இதற்கு செய்யப்படும் செலவுகளையும் அதனால் கிடைக்கப்படும் லாபத்தையும் கணக்கிட்டு பார்த்து இந்த சேவையை நிறுத்துவதற்கு அந்நிறுவனம் முடிவு செய்திருக்கலாம். ஆனால் தற்போது வரை இதைப் பற்றிய தெளிவான எந்த ஒரு பதிலையும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Facebook, Technology

    அடுத்த செய்தி