Home /News /technology /

Location Tracking சார்ந்த சில அம்சங்களை மே 31-ம் தேதியோடு நிறுத்த உள்ள ஃபேஸ்புக்... காரணம் என்ன.?

Location Tracking சார்ந்த சில அம்சங்களை மே 31-ம் தேதியோடு நிறுத்த உள்ள ஃபேஸ்புக்... காரணம் என்ன.?

மாதிரி படம்

மாதிரி படம்

Facebook Location Tracking | குறைவான யூஸர்கள் மட்டுமே பயன்படுத்துவதால் ஒரு சில லொக்கேஷன் சர்விஸ்களை நிறுத்த Facebook முடிவு செய்து உள்ளது.

மெட்டாவுக்கு (Meta) சொந்தமான சோஷியல் மீடியா பிளாட்ஃபார்மான Facebook யூஸர்களின் ரியல்-டைம் லொக்கேஷனை கண்காணிப்பது போன்ற அதன் பல சர்விஸ்களை விரைவில் நிறுத்த உள்ளது.

குறைவான யூஸர்கள் மட்டுமே பயன்படுத்துவதால் ஒரு சில லொக்கேஷன் சர்விஸ்களை நிறுத்த Facebook முடிவு செய்து உள்ளது. நியர்பை ஃபிரெண்ட்ஸ் (Nearby Friends), வெதர் அலர்ட்ஸ் (Weather Alerts), லொக்கேஷன் ஹிஸ்ட்ரி (Location History), பேக்ரவுண்ட் லொக்கேஷன் (Background Location) உள்ளிட்ட சில சர்விஸ்கள் "குறைந்த பயன்பாடு" காரணமாக நிறுத்தப்பட உள்ள Facebook-ன் சில சர்வீஸ்கள் ஆகும்.

இது தொடர்பாக ஏற்கனவே இந்த அம்சங்களை பயன்படுத்தி உள்ளவர்களுக்கு அனுப்பி உள்ள நோட்டிஃபிகேஷனில், மே 31 அன்றுடன் இந்த அம்சங்களுடன் தொடர்புடைய டேட்டாவை சேகரிப்பதை நிறுத்த உள்ளதாகவும், நிறுத்தப்பட உள்ள லொக்கேஷன் சர்விஸ்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள டேட்டாவையும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி க்ளியர் செய்ய உள்ளதாகவும் ஃபேஸ்புக் கூறி இருக்கிறது. இதனிடையே ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இந்த செய்தியை அமெரிக்க தொழில்நுட்ப செய்தி வெப்சைட்டான The Verge-க்கு அனுப்பி உள்ள இ மெயிலில் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் குறைந்த யூஸர்களின் பயன்பாடு காரணமாக Facebook-ல் சில லொக்கேஷன் அடிப்படையிலான அம்சங்களை நாங்கள் நிறுத்த முடிவு செய்தாலும், தங்கள் இருப்பிடத் தகவல் எவ்வாறு சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது என்பதை நிர்வகிக்க லொக்கேஷன் சர்விஸ்களை யூஸர்கள் பயன்படுத்தலாம் என்று அந்த மெயிலில் கூறி இருப்பதாக The Verge குறிப்பிட்டு உள்ளது.



மேலும் வெளியாகி உள்ள தகவல்களின்படி Facebook இப்போது லொக்கேஷன் டேட்டாக்களை சேகரிப்பதை முற்றிலுமாக நிறுத்த போகிறது என்று அர்த்தமல்ல. யூஸர்களுக்கான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி, Facebook அதன் தரவுகளுக்கு ஏற்ப தொடர்புடைய விளம்பரங்கள் மற்றும் லொக்கேஷன் செக்-இன்ஸ்களை வழங்க மற்றும் பிற அனுபவங்களுக்காக லொக்கேஷன் தகவலை சேகரிப்பதைத் தொடர உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. Settings and Privacy மெனுவில் Facebook சேமிக்கும் எந்த லொக்கேஷன் டேட்டாவையும் யூஸர்கள் பார்க்கலாம், டவுன்லோட் செய்யலாம் அல்லது டெலிட் செய்யலாம். எனினும் யூஸர்கள் தாங்களாகவே இதை செய்ய தவறினால், ஆகஸ்ட் 1-ஆம் தேதி அதன் நிறுத்தப்பட உள்ள சர்விஸ்கள் தொடர்பான சேமித்து வைக்கப்பட்டிருக்கும் டேட்டாக்கள் டெலிட் செய்யப்படும் என்றும் Facebook குறிப்பிட்டுள்ளது.

Also Read : உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட் 'ஹேக்' செய்து விட்டார்களா? உடனே Recover செய்வது எப்படி?

ஃபேஸ்புக் குறிப்பிட்ட லொக்கேஷன் தொடர்பான சர்வீஸ்களை நிறுத்துவதற்கு முக்கிய காரணம் அதிகம் அவை பயன்டுத்தப்படாதது தான். எனவே இது பெரும்பாலான யூஸர்களை பாதிக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. Nearby Friends, Weather alerts, Location History or Background Location ஆகியவற்றை நீங்கள் முன்பு பயன்படுத்தியிருந்தாலும், இந்த அம்சங்கள் வரும் மே 31, 2022-க்குப் பிறகு கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Facebook, Technology

அடுத்த செய்தி