போட்டோ, வீடியோ எடுக்ககூடிய ரே-பான் ஸ்மார்ட் கிளாஸை அறிமுகப்படுத்திய பேஸ்புக்..

காட்சி படம்

இந்த கிளாஸசை பயன்படுத்தும் மக்கள் "ஹே பேஸ்புக்" என்று கூறி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆட்டோமெட்டிக்காக எடுக்கலாம்.

  • Share this:
ஃபேஸ்புக் நிறுவனம் கண்ணாடிகள் தயாரிக்கும் நிறுவனமான ரே-பானுடன் இணைந்து தனது முதல் ஸ்மார்ட் கிளாஸசை அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் மற்றும் ரே-பான் நிறுவனங்கள் இந்த ஸ்மார்ட் கிளாசஸ்களுக்கு ரே-பான் ஸ்டோரீஸ் என்று பெயரிட்டுள்ளது. ஆனால் இதில் AR (Augmented Reality) தொழில்நுட்பம் இல்லை. இந்த ஸ்மார்ட் கிளாசஸ் புகைப்படம் மற்றும் 30 வினாடிகள் கொண்ட வீடியோக்களை மட்டுமே எடுக்கும்.

இதுதவிர இந்த கிளாசஸ் மியூசிக் மற்றும் பாட்காஸ்ட் போன்றவற்றை பிளே செய்வதோடு போன் கால்களை செய்யவும் அனுமதிக்கிறது. இந்த ஸ்மார்ட் கிளாசஸ் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இத்தாலி, அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இதன் விலை $299 அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 21,975 இருக்கும். ஆகியூமென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் ஃபேஸ்புக் எந்தளவுக்கு செயல்படுகிறது என்பதை காட்ட ஸ்மார்ட் கிளாசஸ் தயாரிக்கும் பணியில் ரே-பான் நிறுவனத்துடன் இணைந்தது. மேலும் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் எதிர்காலத்தில் வரப்போகிற ஆகியூமென்டட் ரியாலிட்டி வளர்ச்சி குறித்து பேசி மக்களை உற்சாகப்படுத்தியிருந்தார்.

இந்த ஆகியூமென்டட் ரியாலிட்டி கிளாஸ், ஸ்மார்ட்போன்களின் உதவி இல்லாமல் கேம்கள்களை விளையாட அல்லது சமூக ஊடகங்களில் ஏதாவது பகிர்ந்து கொள்ள மக்களை அனுமதிக்கும். கடந்த வியாழக்கிழமை ஜுக்கர்பெர்க் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது "ரே-பான் ஸ்டோரீஸ் (ஸ்மார்ட் கிளாசஸ்), எதிர்காலத்திற்கான ஒரு முக்கியமான படியாகும். அந்த சமயத்தில் தொலைபேசிகள் நம் வாழ்வின் மையப் பகுதியாக இருக்காது. மேலும் நீங்கள் ஒரு சாதனத்துடன் தொடர்புகொள்வது அல்லது உங்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்புகொள்ள எதுவாக இருக்கும் சாதனத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை" என தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள ரே-பான் ஸ்டோரீஸ் கிளாசில் ஃபேஸ்புக் நிறுவனம் எந்த AR தொழில்நுட்பத்தையும் சேர்க்கவில்லை என்றாலும், தற்போது இந்த இலக்கை நோக்கி நிறுவனம் பயணித்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், கிளாசஸ் AR உடன் வெளிவராதது பல ஆர்வலர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில், இப்போது பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து வரும் ஸ்மார்ட் கிளாசஸ் கொண்டு மக்களை பேஸ்புக், ஷாப்பிங் அல்லது விளையாட்டுகளை பிரௌசிங் செய்ய அனுமதிக்காது.

இதுதவிர, இந்த ஸ்மார்ட் கிளாசஸ் ஒரு விர்ச்சுவல் அசிஸ்டன்ஸையும் சேர்த்துள்ளது. எனவே இந்த கிளாஸசை பயன்படுத்தும் மக்கள் தங்கள் கைகளை பயன்படுத்தாமலேயே, "ஹே பேஸ்புக்" என்று கூறி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆட்டோமெட்டிக்காக எடுக்கலாம். ரே-பான் ஸ்டோரீஸ்களை பயன்படுத்துபவர்கள் அதன் மூலம் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மற்ற தளங்களில் ஷேர் செய்ய ஒரு தனி ஃபேஸ்புக் வியூ ஆப்-ஐ இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். ​​இதுபோன்ற ஸ்மார்ட் கிளாஸ்களை வெளியிடும் முதல் நிறுவனம் பேஸ்புக் அல்ல என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம். இதற்கு முன்பாக கூகுள், ஸ்னாப் மற்றும் அமேசான் என அனைத்தும் முன்னணி நிறுவனங்களும் ஸ்மார்ட் கிளாசஸ்களை வெளியிட்டன. இருப்பினும், நுகர்வோரின் விருப்பத்தை அவை முழுமையாக பூரித்து செய்யவில்லை.

Also Read : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் OTT தளத்தை இலவசமாக அணுக வேண்டுமா? இதோ ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்ஸ்!

ஸ்மார்ட் கிளாஸ் வணிக சந்தையில் இதுவரை நுழையவில்லை என்றாலும் அவை வளர்ந்து வரும் சந்தையின் ஒரு பகுதி என்று ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். சமீபத்தில் ImmersivEdge ஆலோசகர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் Cnet அறிக்கையில் மேற்கோளிட்டு காட்டப்பட்டது. அதில், ஸ்மார்ட் கிளாசஸின் வருடாந்திர விற்பனை 2030-க்குள் 22 மில்லியன் யூனிட்களை எட்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த ஸ்மார்ட் கிளாசஸ் பிரைவசி கன்செர்ன் என்ற அம்சத்துடன் வருகிறது. ஆனால் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் விஷயத்தில் பேஸ்புக் நிறுவனம் சரியாக செயல்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், வாட்ஸ்அப் தகவலைகளை பேஸ்புக்கிற்கு சொந்தமான நிறுவனங்களோடு பகிரும் என்ற தனியுரிமை கொள்கைகளால் பேஸ்புக் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: