எப்போது சரியாகும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முடக்கம்? இன்னமும் சில பயனாளர்கள் அவதி

இந்த பிரச்னையை சரி செய்ய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களின் டெக் டீம் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

Web Desk | news18
Updated: March 14, 2019, 9:23 AM IST
எப்போது சரியாகும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முடக்கம்? இன்னமும் சில பயனாளர்கள் அவதி
Social Media
Web Desk | news18
Updated: March 14, 2019, 9:23 AM IST
பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதள கணக்குகள் இன்னமும் பல இடங்களில் முடங்கி கிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல இடங்களில் நேற்று திடீரென முடங்கின.

பயனர்களின் புகார்கள் அதிகரிக்க துவங்கிய நிலையில் உடனடியாக தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்துவிட்டதாகவும், தொழில்நுட்ப கோளாறுகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது.


ஆனால், உலகளவில் இன்னமும் சில பயனாளர்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள Down Detector, இங்கிலாந்து, டெக்சாஸ், சீட்டல், வாஷிங்டன், லத்தின் அமெரிக்காவின் சில பகுதிகள், பெரு, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட இடங்களிலும் பயனர்களுக்கு சமூக வலைதள கணக்குகள் முடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

லாக் அவுட் செய்யாத பயனர்கள் சமூக வலை கணக்குகளை இந்த இடங்களில் பயன்படுத்த முடிவதாகவும், அவர்கள் ஒருமுறை லாக் அவுட் செய்துவிட்டு மீண்டும் முயன்றால் அவர்களால் லாக் இன் செய்ய முடியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Loading...

இந்த பிரச்னையை சரி செய்ய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களின் டெக் டீம் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. விரைவில் உலகம் முழுவதும் இந்த தொழில் நுட்பக் கோளாறு சீராகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also watch:
First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...