Home /News /technology /

2.7 கோடி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகள் நீக்கம் - வெளியான தகவலால் பயனர்கள் அதிர்ச்சி!

2.7 கோடி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகள் நீக்கம் - வெளியான தகவலால் பயனர்கள் அதிர்ச்சி!

ஒவ்வொரு மாதமும் கம்ப்ளையன்ட் அறிக்கை எனப்படும் யூஸர்கள் பதிவு செய்த புகார்கள் மற்றும் அதன் மீது நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய முழு விவரங்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் கம்ப்ளையன்ட் அறிக்கை எனப்படும் யூஸர்கள் பதிவு செய்த புகார்கள் மற்றும் அதன் மீது நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய முழு விவரங்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் கம்ப்ளையன்ட் அறிக்கை எனப்படும் யூஸர்கள் பதிவு செய்த புகார்கள் மற்றும் அதன் மீது நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய முழு விவரங்கள் வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இணையம் உலகின் பெரும்பாலான நபர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியுள்ள நிலையில், தொழில் நுட்ப ஜாம்பவான்கள் ஒவ்வொரு யூசரின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பாதுகாப்பு விதிமுறைகளின் படி சமூக ஊடக சேவைகள் வழங்கும் தொழில்நுட்ப பெரு நிறுவனங்கள் அனைத்துமே மாதாந்திர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பே கூறப்பட்டது. ஒவ்வொரு மாதமும் கம்ப்ளையன்ட் அறிக்கை எனப்படும் யூஸர்கள் பதிவு செய்த புகார்கள் மற்றும் அதன் மீது நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய முழு விவரங்களையும் வழங்க வேண்டும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடக தளங்களுமே மாதாந்திர அறிக்கையை வழங்கி வருகின்றன. மெட்டாவின் துணை நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து 2.7 கோடி பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.



இவற்றில் 1.73 கோடி பதிவுகள் ஸ்பேம் பதிவுகளாகவும், 23 லட்சம் பதிவுகள் வன்முறையை தூண்டக்கூடிய கிராபிகல் உள்ளடக்கங்களாகவும் இருந்தன என தெரியவந்தள்ளது. அதுமட்டுமில்லாமல் இவ்வகையான பதிவுகளின் மீது எழுந்த புகார்களும், அது சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அறிக்கையில் விரிவாக இருந்தன. இதன் மூலம் மெட்டா நிறுவனம், 100%, அனைத்து புகார்களையும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்ததாக அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

ஸ்பாம் பதிவுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெறுப்பை வெளிப்படுத்தும் பதிவுகள், நிர்வாணம், வன்முறை, பாலியல் உள்ளடக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவிகளில், புகார் செய்யப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டன. இவற்றில் 27 பதிவுகள் நிர்வாண உள்ளடக்கம் என்றும், 23 லட்சம் பதிவுகள் வன்முறை தூண்டக்கூடிய வகையில் இருந்தன என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 9 லட்சம் பதிவுகள் தற்கொலை சார்ந்தும், தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளும் வகையிலும் இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 22,000க்கும் மேற்பட்ட பதிவுகளில் வெறுப்பை வெளிப்படுத்தும் உள்ளடக்கம், 3.7 லட்சம் பதிவுகளில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட, நிர்வாணம் மற்றும் பாலியல் உள்ளடக்கம் என கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.

இந்த நிறுவனங்கள் ஒரு பக்கம் தானாகவே இத்தகைய பதிவுகளை கண்டறிந்து நீக்கி வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு, யூசர்களின் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல, தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி, யூசர்களும் இத்தகைய பதிவுகளை தவறாமல் புகார் அளிக்க வேண்டும் என்று மெட்டா நிறுவனம் கோரியுள்ளது.



அந்தந்த தளங்களின் குறை தீர்க்கும் அமைப்பின் மூலம், யூசர்களின் புகார்களுக்கு தீர்வு வழங்கி வருவதாகக் கூறியுள்ளது. ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரை, மொத்தம் 626 புகார்களில், 603 புகார்களை சரியான கருவிகள் வழங்கியதன் மூலம் தீர்த்து வைத்ததாகவும், 23 புகார்களுக்கு நிறுவனத்தின் கொள்கைகளின் அடிப்படையில் தீர்வு கண்டதாகவும் தெரிவித்துள்ளது.

அதே போல இன்ஸ்டாகிராமில், மொத்தம் 1,033 புகார்களில், 945 புகார்களை சரியான கருவிகள் வழங்கியதன் மூலம் தீர்த்து வைத்ததாகவும், 35 புகார்களுக்கு நிறுவனத்தின் கொள்கைகளின் அடிப்படையில் தீர்வு கண்டதாகவும் தெரிவித்துள்ளது. மீதம் உள்ள புகார்கள் அடுத்த 45 நாட்களுக்குள் தீர்க்கப்படும் என்று கூறியுள்ளது.
Published by:Anupriyam K
First published:

Tags: Facebook, Facebook stories, Gadgets, Instagram

அடுத்த செய்தி