Home /News /technology /

இந்தியாவில் ஃபேஸ்புக் வளர்ச்சி வீழ்ச்சி - காரணம் இதுதான்

இந்தியாவில் ஃபேஸ்புக் வளர்ச்சி வீழ்ச்சி - காரணம் இதுதான்

ஃபேஸ்புக் வளர்ச்சி

ஃபேஸ்புக் வளர்ச்சி

Facebook India Growth : ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் வெளியிட்ட காலாண்டு அறிக்கையில் இந்தியாவில் கடந்த மூன்று மாதத்தில் ஃபேஸ்புக் யூசர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    உலகின் மிகப் பெரிய சமூக ஊடகங்களில் ஃபேஸ்புக் நிறுவனமும் ஒன்று. அமெரிக்க நிறுவனமான ஃபேஸ்புக்கிற்கு, இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தையாக இருந்து வருகிறது! தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட ஏற்பட யூசர்களின் தேவைக்கு ஏற்ப பல பலவிதமான புதிய அம்சங்கள், சேவைகள் உட்பட, பாதுகாப்பு அம்சங்களையும் தொழில்நுட்ப அப்டேட்களையும் ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து செய்து வந்துள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட காரணத்தால் பேஸ்புக்கின் வளர்ச்சி குறைவாக இருப்பதாக சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியானது. சமீபத்திய காலாண்டு அறிக்கையில் இந்தியாவில் ஃபேஸ்புக் வளர்ச்சி மிகவும் கடினமாக இருக்கிறது என்று ஹைலைட் செய்யப்பட்டிருந்தது. இதற்கு என்ன காரணம் என்று இங்கே பார்க்கலாம்.

    ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் வெளியிட்ட காலாண்டு அறிக்கையில் இந்தியாவில் கடந்த மூன்று மாதத்தில் ஃபேஸ்புக் யூசர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முக்கியமான காரணமாக மொபைல் டேட்டாவின் விலை ஏற்றம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி மொபைல் டேட்டாவின் விலையை மற்றும் மாதாந்திர ரீசார்ஜ் விலையை இந்தியாவில் சேவை வழங்கும் அனைத்து நெட்வொர்க்குகளும் அதிகரித்துள்ளன. ஆனால் இணையத்தின் பயன்பாடு மற்றும் சேவை தற்பொழுது அனைவருக்குமே தேவையான மற்றும் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டதால், மொபைல் டேட்டா பயன்பாடு ஃபேஸ்புக் யூசர்களின் எண்ணிக்கையை குறைக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது! எனவே ஃபேஸ்புக் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு வேறு காரணம் ஏதேனும் இருக்கக்கூடும். அதை உறுதி செய்யும் வகையில் ரியூட்டர்ஸ் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் மொபைல் டேட்டா விலை அதிகரிப்பு இதற்கு காரணம் இல்லை. இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன என்பதை குறிப்பிட்டிருந்தது.

    ALSO READ | உஷார்... வாடிக்கையாளர்களுக்கு Netfilx முக்கிய எச்சரிக்கை

    இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனமே ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டது. இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக் நிறுவனம் என்னவெல்லாம் செய்தது என்பதைப்பற்றிய, எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து எந்த செயல்களில் ஈடுபட்டது என்பதை ஆய்வு செய்தபோது டேட்டா விலை உயர்வு என்ற பிரச்சினையைக் கடந்து வேறு சில முக்கியமான பிரச்சனைகளும் இருப்பதை கண்டறிந்தது. அதில் முக்கிய காரணமாக ஃபேஸ்புக் பயன்படுத்துவதில் பாதுகாப்பு மற்றும் பிரைவசி குறைவு என்ற காரணங்களால், கணிசமான அளவில் பெண்கள் பேஸ்புக்கில் இருந்து விலகி சென்றுவிட்டார்கள்.

    ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்


    புதிதாக சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்குபவர்களும் ஃபேஸ்புக்கை தவிர்க்கிறார்கள். அது மட்டுமில்லாமல் பெண்கள் ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்துவதை நிறுத்தினால், இந்த தளம் இந்தியாவில் வளர்ச்சி அடைய முடியாது என்பதை மிகவும் உறுதியாக தெரிவித்திருந்தனர். ‘நியூடிட்டி’ அதாவது நிர்வாணம் சார்ந்த உள்ளடக்கங்கள் பேஸ்புக்கின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது, இதை விரும்பாத பலரும் ஃபேஸ்புக்குக்கு மாற்றாக வேறு தளங்களுக்கு செல்ல தொடங்கி விட்டார்கள். இதனாலும் பேஸ்புக்கின் வளர்ச்சி இந்தியாவை கணிசமாக குறைந்துள்ளது.

    கடினமான யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் உள் நாட்டு மொழிகளுக்கு போதிய ஆதரவின்மை ஆகிய ஆகியவையும் ஃபேஸ்புக் யூசர்கள் வேறு தளங்களை நாடி செல்வதற்கு காரணமாக இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.

    ALSO READ | BHASHINI | பிராந்திய மொழிகளின் புரிதலுக்கான சிக்கலை தீர்த்து வைக்கும் அரசின் புதிய தளம்
     ஃபேஸ்புக் யூசர்களின் எண்ணிக்கை அல்லது வளர்ச்சியும் குறைகிறது என்பதற்கான காரணத்தை கண்டறிந்த அதே நேரத்தில் மற்றொரு முக்கியமான விஷயத்தையும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. தற்பொழுது ஃபேஸ்புக் முழுக்க முழுக்க இளைஞர்களை குறிவைத்து இயங்கி வருவதால், இன்றைய இளைஞர்கள் அனைவருமே வீடியோ உள்ளடக்கங்களையே விரும்புகிறார்கள். அதனால் தான் டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு, இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட் போன்ற வேறு வீடியோ உள்ளடக்கங்கள் சார்ந்த சோசியல் மீடியா, சமீபத்தில் மிகவும் பிரபலமாகி உள்ளன. இந்த பிரச்சனைகளை ஃபேஸ்புக் நிறுவனம் உடனடியாக சரி செய்ய வேண்டும், இல்லை என்றால் விரைவிலேயே கணிசமான யூசர்களை மேலும் இழந்து அதன் எதிர்காலம் இந்தியாவில் கேள்விக்குறியாகிவிடும்!
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Facebook

    அடுத்த செய்தி