ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஃபேஸ்புக் குரூப்களிலும் ரீல்ஸ்.. பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக் குரூப்களிலும் ரீல்ஸ்.. பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக் வாடிக்கையாளர்

ஃபேஸ்புக் வாடிக்கையாளர்

இன்ஸ்டாவை போலவே, ஃபேஸ்புக் யூஸர்கள் ஒரு குரூப்பில் ரீல்ஸ்களை ஷேர் செய்வதற்கு முன் கஸ்டமைஸ் செய்து குறிப்பிட்ட ரீலை எடிட் செய்து கொள்ள முடியும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மெட்டாவுக்கு சொந்தமான ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் தனது ஆறாவது ஃபேஸ்புக் சமூக உச்சிமாநாட்டை (Facebook Communities Summit) நடத்தி முடித்தது. இந்த வருடாந்திர கூட்டத்தில் Facebook groups-களுக்கான பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்தது.

  இன்ஸ்டாகிராமிலும் ஃபேஸ்புக்கிலும் ரீல்ஸ் மிகவும் பிரபலமாக உள்ள நிலையில், இனி யூஸர்கள் தாங்கள் இருக்கும் ஃபேஸ்புக் குரூப்களிலும் ரீல்ஸ்களை பார்க்க மற்றும் பகிர முடியும். இன்ஸ்டாவை போலவே, ஃபேஸ்புக் யூஸர்கள் ஒரு குரூப்பில் ரீல்ஸ்களை ஷேர் செய்வதற்கு முன் கஸ்டமைஸ் செய்து குறிப்பிட்ட ரீலை எடிட் செய்து கொள்ள முடியும்.

  ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான குரூப்ஸ் சேர்வதை காண முடிவதாகவும், ஃபேஸ்புக்கில் உள்ள பெரும்பாலான யூஸர்கள் குறைந்தது ஆக்டிவாக உள்ள 15 குரூப்களில் உறுப்பினர்களாக உள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது. இதன் மூலம் ஃபேஸ்புக் யூஸர்களிடையே Gropus மிகவும் பிரபலமாக இருப்பது தெரிய வந்துள்ளதால், Reels for Groups அம்சம் மற்றும் Public Facebook event-ஐ யூஸர்கள் தங்கள் இன்ஸ்டா ஸ்டோரியுடன் ஷேர் செய்யும் அம்சம் ஆகியவை அடங்கும்.

  Read More : இன்ஸ்டாவில் வரக்கூடிய லைக்குகளை மறைக்க வேண்டுமா.? இதோ உங்களுக்கான டிப்ஸ்.!

  Facebook group-களில் ரீல்களை சேர்ப்பது உறுப்பினர்களை இன்னும் நன்கு ஆழமாக இணைக்கவும், தகவல்களை ஷேர் செய்யவும், ஸ்டோரிஸ்களை சொல்லவும் அனுமதிக்கிறது. ஒரு குரூப்பின் அட்மின்கள் அல்லது மெம்பர்கள் தங்கள் ரீல்ஸை குரூப்பில் ஷேர் செய்யும் முன் ஆடியோ, ஃபில்ட்டர்ஸ் மற்றும் டெக்ஸ்ட் ஓவர்லேஸ் உள்ளிட்ட கிரியேட்டிவ் எலெமென்ட்ஸ்களை சேர்த்து மெருகேற்றி கொள்ளலாம். அதே போல குரூப் மெம்பர்கள் தங்கள் இன்ஸ்டா ஸ்டோரிஸை பயன்படுத்தி அவர்கள் இருக்கும் குரூப்பின் பப்ளிக் ஃபேஸ்புக் ஈவன்ட்-ஐ ஷேர் செய்வதன் மூலம் தங்கள் கம்யூனிட்டியை பலருக்கும் தெரியப்படுத்தலாம் என்று நிறுவனம் கூறி இருக்கிறது.

  சோஷியல் மீடியா நிறுவனமான ஃபேஸ்புக்கில் குரூப்களுக்கு மேலும் வர உள்ள புதிய அம்சங்களில் About Me செக்ஷனில் கொடுக்கப்படும் தகவலை கஸ்டமைஸ் செய்வதற்கான திறனும் சோதிக்கப்பட்டு வருகிறது. யூஸர்கள் தங்கள் கம்யூனிட்டியுடன் தங்களை பற்றி ஷேர் செய்ய விரும்பும் தகவலை ஹைலைட் செய்ய இந்த அம்சம் உதவும் என்று நிறுவனம் தனது Blogpost ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. மேலும் குரூப்ஸ்களில் உள்ள அட்மின்களுக்கு Moderation-ஐ மேம்படுத்தியுள்ளதாகவும் மெட்டா அறிவித்துள்ளது.

  ஃபேஸ்புக் குரூப் அட்டமின்கள் தேர்ட்-பார்ட்டி ஃபேக்ட் செக்கர்களால் தவறானதாக மதிப்பிடப்பட்ட தகவலை கொண்ட போஸ்ட்களை இப்போது பென்டிங் போஸ்ட்களுக்கு ஆட்டோமேட்டிக்காக மூவ் செய்ய முடியும். அதாவது தவறான தகவல் என்று மதிப்பிடப்பட்ட போஸ்ட்களை குரூப்பிற்குள் அனுமதிக்காமல் ஃபில்ட்டர் செய்ய அட்மின்களால் முடியும். மேலும் கம்யூனிட்டியில் எடுக்கப்பட்ட daily summary of actions பற்றிய தகவல்களும் இனி குரூப் அட்மின்களுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Facebook, Technology