பயனாளர்கள் தகவல் கசிந்த விவகாரம்! பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.34,230 கோடி அபராதம்

கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பிற்கு ஆதரவு திரட்ட செயல்பட்ட கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற அமைப்பு பேஸ்புக் பயனாளர்களின் விவரங்களை சட்டவிரோதமாக பெற்றதாக புகார் எழுந்தது.

Tamilarasu J | news18
Updated: July 13, 2019, 6:16 PM IST
பயனாளர்கள் தகவல் கசிந்த விவகாரம்! பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.34,230 கோடி அபராதம்
ஃபேஸ்புக் | பிராண்ட் மதிப்பு: 83,202 மில்லியன் டாலர்
Tamilarasu J | news18
Updated: July 13, 2019, 6:16 PM IST
ஃபேஸ்புக் பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் அந்நிறுவனத்துக்கு அமெரிக்கா 34 ஆயிரத்து 240 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

உலக அளவில் ஃபேஸ்புக், சமூக வலைதளங்களில் முக்கிய இடத்தைப்பெற்றுள்ளது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை விட ஃபேஸ்புக்கிற்கு ஃபாலோவர்கள் அதிகமாக உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பிற்கு ஆதரவு திரட்ட செயல்பட்ட கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற அமைப்பு பேஸ்புக் பயனாளர்களின் விவரங்களை சட்டவிரோதமாக பெற்றதாக புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைக் காக்கத் தவறிய புகாரில் ஃபேஸ்புக்கிற்கு எதிராக விசாரணை தொடங்கியது.

அதன் முடிவில் பேஸ்புக் நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் 34 ஆயிரத்து 240 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமெரிக்க கூட்டமைப்பு வர்த்தக ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நீதித்துறையின் ஒப்புதல் பெற்ற பின் இந்த அபராதத்தை ஃபேஸ்புக் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் பார்க்க:
First published: July 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...