4 லட்சம் கோடி இழப்பால் இறங்கி வந்த பேஸ்புக் நிறுவனர் - என்ன நடந்தது?

முன்னனி நிறுவனங்கள் பேஸ்புக்-க்கு அளித்து வந்த விளம்பரங்களை நிறுத்தியுள்ளன. இதன் விளைவாக பங்குச்சந்தையில் பல லட்சம் கோடி ரூபாய் சரிவை பேஸ்புக் கண்டுள்ளது. என்ன நடந்தது? 

4 லட்சம் கோடி இழப்பால் இறங்கி வந்த பேஸ்புக் நிறுவனர் - என்ன நடந்தது?
மார்க் ஜுக்கர் பெர்க்
  • News18
  • Last Updated: June 29, 2020, 7:23 AM IST
  • Share this:
அமெரிக்காவில் கறுப்பின் இளைஞர் பிளாய்டை போலீசார் கொன்றதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைகளைக் கண்டித்த அதிபர் டிரம்ப், , "கடைகளில் லூட்டிங் தொடர்ந்தால் துப்பாக்கிச் சூடு தொடங்கும்" என டிவிட்டரில் பதிவிட்டார். மேலும் அதிபர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சி மீதும் குற்றச்சாட்டுகளை வீசியிருந்தார்.

டிரம்ப்பின் பதிவுக்கு இனவெறிக்கு எதிரான அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. அதைத் தொடர்ந்து டிரம்பின் டிவீட்டை டிவிட்டர் நீக்கியதுடன், சில டிவீட்களை, "சரிபார்த்துக் கொள்ளவும்" என்ற குறியீட்டையும் பதித்தது.

அதேநேரத்தில் பேஸ்புக் நிறுவனமோ, டிரம்பின் கருத்துக்களை நீக்கவில்லை. வெகுண்டெழுந்த போராட்டக்காரர்கள் பொய்யான தகவல்கள் மற்றும் இனவெறி கருத்துக்களை பேஸ்புக் நீக்குவதில்லை என குற்றம்சாட்டி எதிர்பபு இயக்கத்தை தொடங்கினர். எல்லாவற்றும் மேலாக பேஸ்புக்கில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


அப்போதும் மசியாத பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பயனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் எனக் கூறியதுடன் டிரம்ப்பின் பதிவை டிவிட்டர் நீக்கியதையும் விமர்சித்தார். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களுடன், பேஸ்புக்கின் வருமானத்துக்கு வித்திடும் விளம்பரதாரர்களும் கொதித்தெழுந்தனர்.

முதலில் யூனிலீவர் நிறுவனம் பேஸ்புக்குக்கு விளம்பரங்களை நிறுத்தப் போவதாக அறிவித்தது. 400-க்கும் அதிகமான பொருட்களை தயாரிக்கும் பெருநிறுவனம் இப்படி அறிவித்தது பேரிடியாக அமைந்தது.


படிக்க: தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் - அதிகம்... குறைவு... எங்கெங்கே..?

படிக்க: சாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்தது என்ன? - News 18க்கு கிடைத்த பிரத்யேக காட்சிகள்
இதுபோதாதென, கோகோ கோலா, ஹோண்டா, லீவைஸ் ஜீன்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஜூலை 1 முதல் விளம்பரங்களை நிறுத்ததுவதாக அறிவித்துள்ளன. இதனால் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும்.

முன்னணி நிறுவனங்களின் அதிரடி முடிவால் பங்குச்சந்தைகளில் பேஸ்புக்கின் மதிப்பு 8.3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது. சக்கர்பெர்க் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளார். இதன் தாக்கம் டிவிட்டரையும் விட்டுவைக்கவில்லை. அதன் பங்குகளும் 7.4 சதவிகித சரிவைக் கண்டுள்ளன.

பின்னர் சற்று கீழிறங்கி வந்துள்ள மார்க், தேர்தல் தொடர்பான அனைத்து பதிவுகளும் இனி குறியீடு செய்யப்படும் என்றும், வேறு இனத்தவரை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கும் அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார். இதில் எந்த அரசியல்வாதிக்கும் விலக்கு இல்லை என்றும் பதிவிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றிருக்கிறார்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading