உலக அளவில் முன்னிலை வகிக்கும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் அண்மைக்காலமாக சர்ச்சையின் பிடியில் சிக்கி வருகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் 533 மில்லியன் அதாவது 53.3 கோடி பயனர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்தன. இதில் இந்தியா உட்பட 106 நாடுகளின் பயனர்களும் அடங்குவர். இதுவரை இல்லாத வகையில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நடைபெற்ற தகவல் கசிவு உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஃபேஸ்புக் பயனர் தகவல் கசிவில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்கின் மொபைல் எண் உள்ளிட்ட சுய விவரங்களுமே கசிந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மார்க் ஜூக்கர்பெர்கின் மொபை எண் தவிர்த்து அவருடைய பிறந்த தேதி, முழு பெயர், லொகேஷன், திருமண தேதி, ஃபேஸ்புக் ஐடி உள்ளிட்ட பல தகவல்களும் வெளியாகி இருப்பதாக தெரியவந்திருகிறது.
தகவல் கசிவில் சிக்கிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸப்புக்கு மாற்றாக பார்க்கப்படும் சிக்னல் செயலியை பயன்படுத்தி வருவதாகவும் தற்போது தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனமானது ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமாக செயல்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வாட்ஸ் அப் புதிய பாதுகாப்பு கொள்கையை அறிவித்தது. இதனை ஏற்றுக்கொள்ளும் பயனர்கள் மட்டுமே வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும் என்றும் மறுப்பவர்கள் பயன்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டது.
இதனையடுத்து சுய விவரங்கள் வெளிவந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாட்ஸ் அப்பின் புதிய கொள்கைகளை ஏற்காமல் பலரும் சிக்னல் எனும் செயலியை பயன்படுத்த தொடங்கினர். சிக்னலில் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் வசதி உள்ளது என்பதால் அதில் அனுப்பப்படும் தகவல்கள் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. மார்க் ஜூக்கர்பர்க் தனது சுய விவரங்களின் பாதுகாப்புத்தன்மையில் அக்கறை கொண்டிருப்பதால் அவர் சிக்னலை பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.
இதனிடையே மார்க் ஜூக்கர்பர்க் மட்டுமல்லாமல் அதன் இணை நிறுவனர்களான Dustin Moskovitz மற்றும் Chris Hughes ஆகியோரின் சுய விவரங்களும் இந்த தகவல் கசிவில் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் பயனாளிகள், 53.3 கோடி பேரின் தகவல்கள் கசிந்ததாக வெளியான செய்தி, பழையது' என, பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Facebook, Mark zuckerberg, Signal App, Technology