Home /News /technology /

விரைவில் வருகிறது ஃபேஸ்புக் வாடிக்கையாளர் சேவை மையம்!

விரைவில் வருகிறது ஃபேஸ்புக் வாடிக்கையாளர் சேவை மையம்!

ஃபேஸ்புக் வாடிக்கையாளர்

ஃபேஸ்புக் வாடிக்கையாளர்

Facebook customer care service : மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் என்ற ஒற்றை சமூக வலைதளத்தை மட்டும் நடத்திக் கொண்டிருக்கவில்லை. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஹாரிஸான் விஆர் மற்றும் இதர சமூக வலைதளங்களையும் நடத்திக் கொண்டிருக்கிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • INTER, IndiaCaliforniaCaliforniaCaliforniaCalifornia
    ஃபேஸ்புக் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிறது. நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து, யூசர்களின் தனியுரிமை பாதுகாப்பு, கட்டுப்பாடுகள் குறித்து ஆட்சேபனைகள், அதிருப்திகள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்திடம் தெரிவிப்பதற்கான சேவை எதுவும் இருந்ததில்லை.

    ஆனால், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா நிறுவனம் இதற்கு தீர்வு காணும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. யூசர்களின் பதிவுகள் நீக்கப்படுவது அல்லது அக்கவுண்டுகள் முடக்கப்படுவது போன்ற சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்கள் அதுகுறித்த புகார்களை தெரிவிப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மெட்டா நிறுவனம் களமிறங்கியுள்ளது.

    மெட்டா நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவு துணைத் தலைவர் பிரெண்ட் ஹாரிஸ், இதுகுறித்து கூறுகையில், வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை உருவாக்குவதற்கு அதிகப்படியான நேரத்தை எங்களது நிறுவனம் செலவிட்டு வருகிறது’’ என்று தெரிவித்ததாக ஃப்ளூம்பெர்க் ஊடக நிறுவனம் தெரிவிக்கிறது.

    ALSO READ | மின் கட்டணம் செலுத்த சொல்லி வாட்ஸ்அப் மெசேஜ் வந்தால் உஷார் - புது மோசடி குறித்து எச்சரிக்கை.!

    வாடிக்கையாளர் சேவை மையத்தில் என்ன நடக்கும்?

    தற்போதைய சூழலில், மெடா வாடிக்கையாளர் சேவை மையத்தின் முக்கிய பணிகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து தகவல் இல்லை. எனினும், கடந்த 2021ஆம் ஆண்டில் சில வாடிக்கையாளர்களுக்காக லைவ் சேட் புரோகிராம் ஒன்றை சோதனை அடிப்படையில் மெடா நிறுவனம் செயல்படுத்தியது.

    அதாவது, ஆங்கிலம் பேசக் கூடிய வாடிக்கையாளர்கள் மட்டும் தங்கள் அக்கவுண்ட் தொடர்பான சந்தேகங்கள், புதிய வசதிகள் குறித்து விளக்கங்கள் ஆகியவற்றை ஃபேஸ்புக் நிறுவன பிரதிநிதியிடம் நேரடியாக பேசி தெரிந்து கொள்ள முடியும். வாடிக்கையாளர்களுக்காக நேரலை உதவித் திட்டம் செயல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்று அப்போது மெட்டா நிறுவனம் கூறியிருந்தது.

    எனினும், இந்த சேவை விரிவாக்கம் செய்யப்படுமா அல்லது பெரிய அளவில் அறிமுகம் செய்ய இன்னும் எத்தனை மாதங்கள் தேவைப்படும் என்பது குறித்து மெட்டா நிறுவனம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

    ALSO READ | அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்.. தோசை பிரிண்ட் செய்யும் இயந்திரம் தெரியுமா மக்களே!

    வாடிக்கையாளர் சேவை பிரிவு ஏன் அவசியமாகிறது

    மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் என்ற ஒற்றை சமூக வலைதளத்தை மட்டும் நடத்திக் கொண்டிருக்கவில்லை. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஹாரிஸான் விஆர் மற்றும் இதர சமூக வலைதளங்களையும் நடத்திக் கொண்டிருக்கிறது. ஆகவே அனைத்து தளங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் இந்த சேவை மையம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

    தன்னாட்சி அமைப்பு

    மெடா நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் கொள்கை சார்ந்த விஷயங்களை கண்காணிப்பது தொடர்பாக, அந்த நிறுவனத்தின் சார்பிலேயே கடந்த 2021ஆம் ஆண்டில் தன்னாட்சி அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அந்த அமைப்பு சமர்ப்பித்த அறிக்கையில், ஃபேஸ்புக்கின் மாடரேட் விதிகள் தொடர்பாக லட்சக்கணக்கான பயனாளர்கள் புகார் தெரிவித்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டுதான் வாடிக்கையாளர் சேவை பிரிவு தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Facebook, Instagram, Social media, WhatsApp

    அடுத்த செய்தி