• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • மெசஞ்சருடன் இணையும் வாட்ஸ் அப் - பேஸ்புக்கின் அடுத்த அப்டேட்!

மெசஞ்சருடன் இணையும் வாட்ஸ் அப் - பேஸ்புக்கின் அடுத்த அப்டேட்!

மெசஞ்சருடன் இணையும் வாட்ஸ் அப்

மெசஞ்சருடன் இணையும் வாட்ஸ் அப்

யூசர்கள் எளிதில் அணுகும் வகையில் இருப்பதால், இந்த சமூகவலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பேஸ்புக் மெசஞ்சருடன் வாட்ஸ் ஆப்-ஐ இணைக்கும் முயற்சியை பேஸ்புக் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளங்களை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். யூசர்கள் எளிதில் அணுகும் வகையில் இருப்பதால், இந்த சமூகவலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இன்ஸ்டாகிராமையும், பேஸ்புக் மெசஞ்சரையும் ஒன்றாக இணைத்த பேஸ்புக், அடுத்ததாக வாட்ஸ் ஆப்- ஐ இணைக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது.

முகநூல் நிறுவனத்தின் அப்டேட்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வலைதளமான WABetaInfo, இந்த தகவலையும் தெரிவித்துள்ளது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த அம்சம் iOS வெர்சன்களுக்கு மட்டும் பொருந்தும் வகையில் இருப்பதாகவும், இதனுடைய செயல்பாட்டைப் பொறுத்து அடுத்ததாக ஆன்டிராய்டு வெர்சன்களுக்கான அப்டேட்டை பேஸ்புக் நிறுவனம் செய்ய உள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும், iOS வெர்சன்களுக்கான செயல்பாட்டையும் பேஸ்புக் தொடங்கியுள்ளதாக அந்த வலைதளம் கூறியுள்ளது. உறுதியான அறிவிப்பு எப்போது வெளியாகும் என கூறப்படவில்லை என்றாலும், பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் செயலிகளை இணைக்கும் முயற்சி இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது.

Also read... டிவிட்டர், கிளப்ஹவுஸ் வரிசையில் பேஸ்புக் - புதிய அப்டேட் விரைவில் அறிமுகம்!

அனைத்து வெர்சன் மொபைல் யூசர்களும் பயன்படுத்தும் வகையில், சாப்ட்வேர்களை பேஸ்புக் வடிவமைத்து வருவதாக WABetaInfo கூறியுள்ளது. பேஸ்புக் மெசஞ்சரும், இன்ஸ்டாகிராமும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணைக்கப்பட்டது. இந்த அம்சம் நடைமுறைக்கு வந்தப் பின்னர் இன்ஸ்டாகிராம் யூசர்கள் செயலியை மாற்றாமல், பேஸ்புக் நண்பர்களுடன் உரையாடலாம். மேலும், மெசேஜ் மற்றும் அழைப்புகளை ரிசீவ் செய்துகொள்ளும் ஒப்புதலையும் யூசர்கள் விரும்பினால் கொடுக்கலாம் என்ற ப்யூச்சரையும் பேஸ்புக் கொடுத்திருந்தது. வாட்ஸ் ஆப் செயலியுடன் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையும்பட்சத்தில் ஒரு செயலியில் இருந்துவாறு மற்ற செயலிகளில் இருக்கும் நண்பர்களுடன் சாட் செய்யும் வசதி உண்டாகும்.

தங்களுக்கு பிடிக்காத நபரை ஒரு செயலியில் பிளாக் செய்தால், மற்ற இரு செயலிகளிலும் இயல்பாக ப்ளாக் ஆகும் செயல்முறையும், மூன்று செயலிகளையும் ஒன்றாக இணைத்த பின்னர் நடைமுறைக்கு வரவுள்ளது. ஒருவேளை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் தளங்களில் இல்லாமல் வாட்ஸ் ஆப்பில் மட்டுமே ஒருவர் இருந்தால், அந்த நபர் பேஸ்புக்கில் இருப்பவருடன் தொடர்பு கொள்ளும் வசதியும் செயலிகள் இணைப்புக்கு பின் சாத்தியமாக உள்ளது. இதற்கான பணிகளையும் பேஸ்புக் செய்து வருகிறது.

அதேநேரத்தில் யூசர்களின் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு குறித்தும் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். கோடிக்கணக்கானோர் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வரும் நிலையில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் வணி நோகத்ததுக்காக பயன்படுத்துவதை யூசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒருவேளை வாட்ஸ் ஆப்புடன் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் இணைக்கப்பட்டால், தனிநபர் தகவல்கள் வியாபார யுக்திகளுக்காகவும், வணிக நோக்கத்துக்காகவும் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: