300 கோடி போலி கணக்குகள்... நீக்கியது ஃபேஸ்புக்!

10ஆயிரம் பதிவுகளில் 25 பதிவுகள் வன்முறைக்கு வழிவகுப்பதாகவே உள்ளன.

Web Desk | news18
Updated: May 24, 2019, 5:27 PM IST
300 கோடி போலி கணக்குகள்... நீக்கியது ஃபேஸ்புக்!
மாதிரிப்படம் (Reuters)
Web Desk | news18
Updated: May 24, 2019, 5:27 PM IST
ஃபேஸ்புக் நிர்வாகம் 300 கோடி போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மார்ச் 2019 வரையிலான ஆறு மாத காலத்தில் சுமார் 300 கோடிக்கும் அதிகமான போலி ஃபேஸ்புக் கணக்குகளை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது ஒரு மாதத்தில் ‘ஆக்டிவ்’ ஆக இருக்கும் ஃபேஸ்புக் பயனாளர்களில் 5 சதவிகிதத்தினர் போலி கணக்குகளை உடையோர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2018 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 1.2 பில்லியன் போலி கணக்குகளும் 2019 ஜனவரி முதல் மார்ச் வரையில் சுமார் 2.19 பில்லியன் போலி கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.


ஃபேஸ்புக் துணைத் தலைவர் கை ரோசென் கூறுகையில், “ஒரே நேரத்திலேயே பல போலி கணக்குகள் தொடங்கப்படுவது எங்களைக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உட்படுத்துகிறது. ஒவ்வொரு 10 ஆயிரம் பதிவுகளிலும் 11 முதல் 14 பதிவுகள் பாலியல் செயல்பாட்டுக் கொள்கையை மீறுவதாகவே வெளியிடப்படுகிறது.

அதேபோல், 10ஆயிரம் பதிவுகளில் 25 பதிவுகள் வன்முறைக்கு வழிவகுப்பதாகவே உள்ளன. இதனாலே நடவடிக்கைகள் கடுமையாக உள்ளன” எனக் குறிப்பிட்டார்.

மேலும் பார்க்க: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் பதிவிறக்கம் செய்வது எப்படி?
First published: May 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...