’இதெல்லாம் ஒரு பொழப்பா..?’- டிக்டாக் ஆப்ஐ வெளுத்து வாங்கிய ஃபேஸ்புக் மார்க்..!

அமெரிக்காவில் சில தலைவர்கள் கூட டிக்டாக் செயலியை தேசிய பாதுகாப்புக் குழு ஒரு முறை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

’இதெல்லாம் ஒரு பொழப்பா..?’- டிக்டாக் ஆப்ஐ வெளுத்து வாங்கிய ஃபேஸ்புக் மார்க்..!
டிக் டாக்
  • News18
  • Last Updated: October 18, 2019, 3:55 PM IST
  • Share this:
’டிக் டாக் செய்யும் வேலைகளை எல்லாம் மக்கள் புரிந்து உணர வேண்டும். சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாள் ஆக பணியாற்றுகிறது டிக்டாக்’ என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சீன நிறுவனமான டிக்டாக் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் பிரபலமடைந்து வருகிறது. மியூசிக்கலி செயலியை விலைக்கு வாங்கி தற்போது டிக்டாக் ஆப் வெற்றிநடை போட்டு வருகிறது. சீன அரசின் கைக்கூலியாகவே டிக்டாக் செயல்பட்டு வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் விமர்சித்துள்ளார்.




சீன நிறுவனமான டிக்டாக் சென்சார் முறையை கையாண்டு வருகிறது. அரசியல், பொதுமக்கள் போராட்டங்கள், அரசுக்கு எதிரான விமர்சனங்கள் என அத்தனையும் சென்சார் என்ற பெயரில் டிக்டாக் செயலியில் பதிவிட முடியாத சூழல் உள்ளது. சீனாவுக்கு எதிராக நடந்து வரும் உலகின் மாபெரும் போராட்டமான ஹாங்காங் போராட்டம் குறித்து ஒரு சிறு வரி கூட டிக்டாக் செயலியில் இருக்காது என்று போராளிகள் விமர்சித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் கூறுகையில், ‘சீன அரசுதான் டிக்டாக் செயலியை முழுமையாகக் கையாண்டு வருகிறது. இதுபோன்ற சேவை நமக்குத் தேவையா. வாட்ஸ்அப் எல்லாம் இதுபோன்ற சென்சார் முறைகளைப் பின்பற்றவில்லை.

அமெரிக்காவில் சில தலைவர்கள் கூட டிக்டாக் செயலியை தேசிய பாதுகாப்புக் குழு ஒரு முறை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.மேலும் பார்க்க: 10 ஆயிரம் ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன் வாங்க ப்ளான் இருக்கா? ரெட்மியில் எது பெஸ்ட்..?

கம்ப்யூட்டர், மொபைல் - ஹேக்கிங்கைத் தடுப்பது எப்படி
First published: October 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading