"ஃபேஸ்புக் பயனாளர்களில் தகவல்கள் திருட்டு, கேள்விக்குறியானப் பாதுகாப்பு என எதையும் ஒரே ஆண்டில் சரி செய்துவிட முடியாது" என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் பயன்பாட்டில் பல குழப்பங்கள் நிலவி வருகிறது. சர்வதேச பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட புகார் முதலில் எழுந்தது. இதன் பின்னர் தொடர்ந்து சுய தகவல்கள், பெர்சனல் புகைப்படங்கள் என அனைத்தும் லீக் ஆனதாக எழுந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அமெரிக்க செனெட் சபையின் விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டார்.
ஒரு கட்டத்தில் ஃபேஸ்புக் பயன்பாட்டில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் தகவல்கள் கசிவு உண்மை தான் என்றும் ஃபேஸ்புக் நிறுவனமே ஒப்புக்கொண்டது.
ஆனால், தொடர்ந்து அமெரிக்க அமைச்சர்களாலும், முதலீட்டாளர்களாலுல் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் மார்க், அனைத்துக் கேள்விகளுக்குமான பதிலை அளித்துள்ளார்.
இது தொடர்பாக மார்க் கூறுகையில், “ஃபேஸ்புக்கில் பல பிரச்னைகள் உள்ளன. ஆனால், அவையெல்லாம் உடனடியாக ஒரே ஆண்டில் தீர்த்துவிடக் கூடிய பிரச்னைகள் அல்ல. தாக்குதல் பேச்சுகளோ, தேர்தல் தலையீடுகளோ தீர்வுகளை உடனடியாகக் கொண்டு வராது.
எங்களது சேவைகளில் நீடிக்கும் பிரச்னைகளைத் தீர்க நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறோம். இன்னும் பல பாதுகாப்பு அரண்களையும் மேம்படுத்தி வருகிறோம்” என்றார்.
மேலும் பார்க்க: 37 ஆண்டுகளுக்குப் பின் மெல்போர்னில் இந்திய அணி வெற்றி
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.