ஹேக் செய்யப்பட்ட அமேசான் நிறுவனரின் போன் - ஆப்பிள் நிறுவனத்தை குற்றஞ்சாட்டும் வாட்ஸ்அப்

ஒரேயொரு வாட்ஸ்அப் மெசேஞ் மூலம் பீசோஸின் போன் ஹேக் செய்யப்பட்டது.

ஹேக் செய்யப்பட்ட அமேசான் நிறுவனரின் போன் - ஆப்பிள் நிறுவனத்தை குற்றஞ்சாட்டும் வாட்ஸ்அப்
ஜெஃப் பீசோஸ்
  • News18
  • Last Updated: January 27, 2020, 8:58 PM IST
  • Share this:
சமீபத்தில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பீசோஸ்-ன் போன் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஒரேயொரு வாட்ஸ்அப் மெசேஞ் மூலம் பீசோஸின் போன் ஹேக் செய்யப்பட்டது. நெட்டிசன்கள் பலரும் வாட்ஸ்அப் நிறுவனத்தைக் குறை சொல்ல வாட்ஸ்அப் நிறுவனமோ ஆப்பிள் OS தான் காரணம் என குற்றம் சுமத்தியுள்ளது.

அமேசான் நிறுவனரின் போன் கடந்த 2018-ம் ஆண்டு ஹேக் ஆனது.


இதுகுறித்து வாட்ஸ்அப் தலைமை நிறுவனமான ஃபேஸ்புக்-ன் சர்வதேச விவகாரத் துறை துணைத் தலைவர் நிக் க்ளெக் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “வாட்ஸ்அப் செயலியை ஒருநாளும் ஹேக் செய்யவே முடியாது. அவ்வளவு பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்தியுள்ளோம்.

ஜெஃப் பீசோஸ் போன் ஹேக் ஆனதற்கு ஆப்பிள் போனின் OS தான் காரணம். end-to-end encryption இருக்கும் ஒரு செயலியை ஹேக் செய்ய முடியாது. ஹேண்ட்செட் கோளாறாய் இருந்தால் மட்டுமே ஹேக்கிங்-க்கு வாய்ப்பு” என்றுள்ளார்.ஃபேஸ்புக்கின் குற்றச்சாட்டுக்கு இதுவரையில் ஆப்பிளிடமிருந்து பதில் வரவில்லை.

மேலும் பார்க்க: ஜியோமியில் சூப்பர் Mi சேல்... உங்களுக்கு ஏற்ற டாப் 5 ஸ்மார்ட்போன்கள்..!
First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading