விளம்பர நிறுவனங்களுக்கு கிடைக்கும் டீன் ஏஜ் பயனர்கள் தரவுகளின் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்க உள்ளதாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.
சோஷியல் மீடியாக்களில் இளைய சமூகத்திற்கு காட்டப்படும் விளம்பரங்களின் வகைகளைக் கட்டுப்படுத்த சமூக ஊடகத் தளங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தகாத விளம்பரங்கள், தவறான உள்ளடக்கத்தைப் போலவே அவர்களை திசை திருப்பவும் தீய வழியில் இட்டுச்செல்லும் பணியையும் செய்யும் என்று எச்சரிக்கின்றனர் சோஷியல் மீடியா வல்லுநர்கள். இதற்கான ஒரு முன்னெடுப்பாக மெட்டா நிறுவனம் இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ், பிப்ரவரி முதல், விளம்பரதாரர்களுக்கு பயனர்களைக் குறிவைக்கும் ஒரு வழியாக, பயனரின் பாலினம் அல்லது அவர்கள் பார்க்கும் போஸ்டுகளின் தரவுகளை பார்க்க முடியாது. பயனர்களின் வயது மற்றும் இருப்பிடம் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதே போல ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்திலும் உள்ள அமைப்புகளுக்குச் சென்று சில வகையான விளம்பரங்களை தவிர்க்கும் அல்லது குறைவாகப் பார்க்கும் ஆப்ஷனை தேர்வுசெய்ய இளைஞர்களுக்கு உதவும் புதிய கட்டுப்பாடுகள் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பொதுவாக விளம்பரதாரர்கள், பயனர்கள் பார்க்கும் போஸ்டுகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் விளம்பரங்களை அமைப்பர். அப்படி தவறான விளம்பரங்களால் பதின்வயதினர்களை குறிவைப்பதைத் தடுக்கும் கட்டுப்பாடுகளை Meta இதன்மூலம் சேர்த்துள்ளது.
இதனால் பதின்ம வயதினர் அவர்கள் வயதிற்கு ஏற்ற விளம்பரங்களை மட்டும் காணும் வாய்ப்பை பெறுவார்கள். அவர்களது நடவடிக்கைகளின் அடிப்படையில் விளம்பரங்கள் அமையாது. இதனால் விளம்பரங்கள் மூலம் அவர்கள் திசைமாறுவது தடுக்கப்படும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.