Home /News /technology /

2.7 கோடி பதிவுகளை நீக்கிய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் - மெட்டா நிறுவனம் அறிக்கை.!

2.7 கோடி பதிவுகளை நீக்கிய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் - மெட்டா நிறுவனம் அறிக்கை.!

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

Facebook and Instagram | தகவல் தொழில்நுட்ப துறை விதிமுறைகளின் படி கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 2.7 கோடி அளவிலான ஆன்லைன் பதிவுகளை ஆகியவற்றிலிருந்து நீக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வகையில் அவர்கள் பதிவேற்றம் செய்யும் பதிவுகளின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. இவற்றில் சில பதிவுகள் மற்றவர்களுக்கு இடையூறு செய்வதாகவும், சில பதிவுகள், வன்முறை, ஆபாசம், மட்டும் தனிமனித தாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் உள்ளது. எனவே இது போல உள்ள பதிவுகளை ஆராய்ந்து, அவற்றில் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் தேவையற்ற பதிவுகளையும் கண்டறிந்து அவை நீக்கபடுகின்றன.

ஆனால் அதுபோன்ற தகவல்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளதால் அவற்றை நீக்குவதற்கு என்று ஒரு தனிக்குழுவை அமைத்து செயல்படுகிறது இந்த மெட்டா நிறுவனம். தகவல் தொழில்நுட்ப துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் 1.23 கோடி அளவிலான தேவையற்ற மற்றும் உபயோகமற்ற பதிவுகளும், 23 லட்சம் அளவில் வன்முறை மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட பதிவுகளையும் நீக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது..

அவ்வாறு நீக்கிய 2.7 கோடி பதிவுகளில் 2.5 கோடி பேஸ்புக் கில் இருந்து நீக்கப்பட்ட பதிவுகள் எனவும் இன்ஸ்டாகிராமில் இருந்து 20 லட்சம் பதிவுகளை நீக்கியதாகவும் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



மெட்டா நிறுவனம் அளித்த அறிக்கை படி பேஸ்புக்கில் மட்டும் 1.73 கோடி அளவிலான “ஸ்பேம்” எனப்படும் தேவையற்ற பதிவுகளை அந்நிறுவனம் நீக்கி உள்ளது அதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் காழ்ப்புணர்ச்சியை தூண்டும் வகையிலும், 23 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாலும் 27 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் பாலுணர்வை தூண்டும் வகையில் இருந்ததாலும் அந்தப் பதிவுகளை நீக்கியதாக அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Also Read : அனுமதியின்றி நமது லொகேஷனை மற்றவருடன் ஷேர் செய்கிறதா இன்ஸ்டாகிராம்.? வெடிக்கும் புதிய சர்ச்சை.!

இதுவே இன்ஸ்டாகிராமை பொருத்தவரையில் தற்கொலை எண்ணத்தை தூண்டும் வகையில் பதிவிடப்பட்ட 9 லட்சம் பதிவுகளையும் காப்புணர்ச்சி தூண்டும் வகையில் இருந்த 22 ஆயிரம் பதிவுகளையும் பாலுணர்வை தூண்டும் வகையில் இருந்த  3.7 லட்சம் பதிவுகளையும் நீக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் போட்டோக்களும் வீடியோக்களும் அடக்கம்.



 

தொழில் நுட்ப விதிமுறையின் படி இது போன்ற சமூக வலைத்தளங்கள் தங்களுடைய யூசர்கள் அளிக்கும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து அதற்கு தீர்வு காண வேண்டும் எனும் விதிமுறை நடைமுறையில் உள்ளது.

Also Read : கூகுள்தான் அதிகமாக டேட்டா டிராக் செய்கிறது - புதிய ஆய்வின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

இது குறித்து கருத்து தெரிவித்த அந்நிறுவனம் பேஸ்புக்கில் மட்டும் சராசரியாக 626 புகார்களும் இன்ஸ்டாகிராமில் ஆயிரத்து 333 புகார்களும் வருவதாகவும் தாங்கள் அவை அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து அவற்றை ஆராய்ந்து அந்த புகார்களை சரி செய்ததாகவும் தெரிவித்துள்ளது. அவ்வாறு உறுதி செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் அந்தந்த பதிவுகளை நீக்கியதாகவும் தெரிவித்துள்ளது
Published by:Selvi M
First published:

Tags: Facebook, India, Instagram, Technology

அடுத்த செய்தி