27 கோடி போலி கணக்குகளை நீக்க பேஸ்புக் அதிரடி முடிவு..!

- News18 Tamil
- Last Updated: February 15, 2020, 7:56 PM IST
பிரபல சமூகவலைதள நிறுவனமான பேஸ்புக் தங்கள் வலைதளத்தில் 275 மில்லியன் போலி கணக்குகளை கண்டறிந்திருப்பதாக அறிவித்துள்ளது.
பேஸ்புக் சமூகவலைதளம் உலகம் முழுக்க பல கோடிக்கணக்கான பயனாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பேஸ்புக் தொடங்கிய காலம் முதலே போலி பயனாளர் கணக்கு என்பது இதை உபயோகிக்கும் பயனாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்துவருகிறது.
நடந்துமுடிந்த 2019-ம் ஆண்டு இறுதிக் கணக்கின் படி பேஸ்புக் தங்களிடம் 275 மில்லியன் அதாவது 27.5 கோடி போலி கணக்குகள் உள்ளதை கண்டறிந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல் வாடிக்கையாக இந்த சமூகவலைதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 250 கோடியாக உள்ளது. போலி கணக்குகளை பொறுத்தவரை நிறுவனம் வளர்ந்துவரும் சந்தையாக உள்ள வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலேயெ அதிகம் உள்ளதாகவும் கண்டறிந்துள்ள நிறுவனம், தேவையற்ற, போலி பயனாளர்களின் கணக்குகளை உண்மையான, வாடிக்கையான பயனாளர்களின் ஒத்துழைப்போடு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.
பேஸ்புக் சமூகவலைதளம் உலகம் முழுக்க பல கோடிக்கணக்கான பயனாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பேஸ்புக் தொடங்கிய காலம் முதலே போலி பயனாளர் கணக்கு என்பது இதை உபயோகிக்கும் பயனாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்துவருகிறது.
நடந்துமுடிந்த 2019-ம் ஆண்டு இறுதிக் கணக்கின் படி பேஸ்புக் தங்களிடம் 275 மில்லியன் அதாவது 27.5 கோடி போலி கணக்குகள் உள்ளதை கண்டறிந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல் வாடிக்கையாக இந்த சமூகவலைதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 250 கோடியாக உள்ளது.