Home /News /technology /

Facebook : உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்வது எப்படி?

Facebook : உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்வது எப்படி?

முகநூல்

முகநூல்

Facebook : மெட்டாவுக்குச் சொந்தமான பேஸ்புக் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் உள்ள மொபைல் ஆப்ஸ் மூலமாகவும் அல்லது வெப் ப்ரவுஸர் மூலமாகவும் ஒரு அக்கவுண்ட்டை டெலிட் செய்ய அனுமதிக்கிறது.

பேஸ்புக் அறிமுகமாகி 15 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. மொத்தம் மூன்று பில்லியன் மாதாந்திர ஆக்டிவ் யூசர்களை கொண்டுள்ள பேஸ்புக் தான் தற்போதைக்கு மிகவும் பிரபலமான சோஷியல் மீடியாக்களில் ஒன்றாகும். நிச்சயம் உங்களுக்கும் ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் இருக்கும்.

இப்படியான பேஸ்புக் நிறுவனம் எந்த அளவிற்கு 'கெத்து' என்றால்? யூசர்கள் தங்கள் அக்கவுண்ட்டை நிரந்தரமாக டிஆக்டிவேட் செய்ய அல்லது டெலிட் செய்யக்கூட பேஸ்புக் நிறுவனம் அனுமதிக்கிறது. அதே சமயம் மனமாற்றத்திற்கான 'கெடு'வாக 30 நாட்களையும் வழங்குகிறது. அந்த 30 நாட்கள் எதற்கு? ஒரு பேஸ்புக் அக்கவுண்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்வது எப்படி? என்கிற விவரங்கள் இதோ:

மெட்டாவுக்குச் சொந்தமான பேஸ்புக் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் உள்ள மொபைல் ஆப்ஸ் மூலமாகவும் அல்லது வெப் ப்ரவுஸர் மூலமாகவும் ஒரு அக்கவுண்ட்டை டெலிட் செய்ய அனுமதிக்கிறது.

அக்கவுண்ட் டெலிஷன் மற்றும் அதன் அனைத்து போஸ்ட்டுகள் மற்றும் பிற தகவல்களை 'ரிவர்ஸ்' செய்ய பேஸ்புக் நிறுவனம் 30 நாட்கள் மட்டுமே நேரம் கொடுக்கும். அதன் பிறகு குறிப்பிட்ட அக்கவுண்ட் மற்றும் அதன் அனைத்து தகவல்களையும் முழுமையாக டெலிட் பேஸ்புக் 90 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

இதையும் படியுங்கள் :  ஐஓஎஸ் மற்றும் ஆண்டிராய்ட் டிவைஸ்களில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது எப்படி?
 மொபைல் ஆப் / ப்ரவுஸர் வழியாக பேஸ்புக் அக்கவுண்ட்டை டெலிட் செய்வது எப்படி?

உங்கள் Android அல்லது iOS வழியாக உங்கள் கணக்குகளை நீக்க Facebook உங்களை அனுமதிக்கிறது. எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்:

- பேஸ்புக் ஆப்பை திறக்கவும்.
- மேல் வலது மூலையில் உள்ள ஹாம்பர்கர் ஐகானை கிளிக் செய்யவும்.
- கீழே ஸ்க்ரோல் செய்து செட்டிங்க்ஸ் & ப்ரைவஸி-ஐ கிளிக் செய்து செட்டிங்ஸ் என்பதைக் கிளிக் செய்யவும்.
- பெர்சனல் அன்ட் அக்கவுண்ட் இன்ஃபர்மேஷன்-ஐ கிளிக் செய்யவும்.
- அக்கவுண்ட் ஓனர்ஷிப் அன்ட் கண்ட்ரோல் என்பதைக் கிளிக் செய்யவும். பேஜிற்கான அக்சஸ் உங்களிடம் இருந்தால், ப்ரொஃபைல் அக்சஸ் அன்ட் கண்ட்ரோல் என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது டிஆக்டிவேஷன் அன்ட் டெலிஷன் என்பதை கிளிக் செய்யவும்
- டெலிட் அக்கவுண்ட் என்பதை தேர்ந்தெடுத்து, அக்கவுண்ட்டை நீக்குவதற்கு 'கன்டினியூ' என்பதை கிளிக் செய்யவும்.
- ஸ்க்ரீனில் தோன்றும் காரணங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும் அல்லது அக்கவுண்ட்டை நீக்குவதற்கு 'கன்டினியூ' என்பதை கிளிக் செய்யவும்
- கீழே ஸ்க்ரோல் செய்து டெலிட் அக்கவுண்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும், அவ்வளவு தான்!

டெஸ்க்டாப் ப்ரவுஸர் வழியாக பேஸ்புக் அக்கவுண்ட்டை டெலிட் செய்வது எப்படி?

- பேஸ்புக் வெப்சைட்டை திறக்கவும்.
- மேல் வலது மூலையில் உள்ள டவுன்வேர்ட்ஸ் ஏரோ-வை கிளிக் செய்யவும்.
- செட்டிங்ஸ் அன்ட் ப்ரைவஸி-க்கு சென்று, செட்டிங்ஸ் என்பதை கிளிக் செய்யவும்.
- இடதுபுறத்தில் உள்ள மெனுக்களில் உள்ள பேஸ்புக் டேப்-ஐ கிளிக் செய்யவும். பேஜிற்கான அக்சஸ் உங்களிடம் இருந்தால், ப்ரைவஸி என்பதை கிளிக் யுவர் பேஸ்புக் இன்ஃபர்மேஷன் என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது குறிப்பிட்ட பக்கத்தின் கீழே உள்ள டி-ஆக்டிவேஷன் அன்ட் டெலிஷன் என்பதை தேர்ந்தெடுத்து, வியூ என்பதை கிளிக் செய்யவும்.
- டெலிட் அக்கவுண்ட் என்பதை தேர்ந்தெடுத்து, 'கன்டினியூ' செய்யவும்.
- இப்போது டெலிட் அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் பாஸ்வேர்ட்-ஐ உள்ளிட்டு, கன்டினியூ' என்பதைக் கிளிக் செய்யவும், அவ்வளவுதான்.

இதையும் படியுங்கள் : whatsapp-ல் உங்களை பிளாக் செய்தவருக்கு மெசேஜ் அனுப்ப உதவும் 2 ரகசிய வழிகள்!

உங்கள் அக்கவுண்ட்டை டெலி செய்து, 30-நாட்கள் என்கிற மீட்புக் காலம் முடிந்தவுடன், அதை உங்களால் மீட்டெடுக்க முடியாது அல்லது நீங்கள் போஸ்ட் செய்த எந்த டேட்டாவைம் உங்களால் அணுக முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் பேஸ்புக் மெஸெஞ்சருக்கான அணுகலையும் இழப்பீர்கள்; மேலும் உங்கள் பேஸ்புக் பாஸ்வேர்ட் சான்றுகள் தேவைப்படும் பிற ஆப்களுக்கான அணுகலையும் இழப்பீர்கள்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Facebook

அடுத்த செய்தி