இன்னும் சில பயனர்களுக்கு ஜிமெயில் சரியாக வேலை செய்யவில்லை: கூகுள் நிறுவனத்தின் விளக்கம் என்ன?

இன்னும் சில பயனர்களுக்கு ஜிமெயில் சரியாக வேலை செய்யவில்லை: கூகுள் நிறுவனத்தின் விளக்கம் என்ன?

கோப்புப் படம்

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த பெரிய செயலிழப்புக்கான காரணத்தை கூகுள் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த 14ம் தேதி 3.47AM PTக்கு உள் சேமிப்பக ஒதுக்கீடு பிரச்சினை காரணமாக கூகுள் சுமார் 45 நிமிடங்கள் அங்கீகார அமைப்பு செயலிழப்பை சந்தித்தது.

 • Share this:
  பயனர்களின் “குறிப்பிடத்தக்க துணைக்குழு” சேவையைப் பயன்படுத்தும்போது அதிக தாமதம், பிழை செய்திகள் (Error Message) அல்லது எதிர்பாராத நிகழ்வு போன்ற சில சிக்கல்களை எதிர்கொண்டதாக கூகுள் உறுதிப்படுத்தியது. இது விரைவாக சரிசெய்யப்பட்டு வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுளின் சேவைகள் நேற்று முன்தினம் சிறிது நேரம் முடங்கியது. 

  யூடியூப், ஜிமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் அசிஸ்டன்ட் தொடங்கி முக்கிய சேவைகள் அனைத்துமே முடங்கின. ட்விட்டரில் பலரும் இதைக் குறிப்பிட்டு #YoutubeDown, #GoogleDown, #GoogleOutage போன்ற ஹேஷ்டேக்குகள் உலகமெங்கும் வைரலாகி வந்தனர். இந்திய நேரப்படி சுமார் ஐந்து மணிக்கே பலருக்கும் கூகுளின் சேவை தடைப்பட்டிருக்கிறது. DownDetector தளத்தில் மக்கள் பதிவிட்டது போலவே இந்தச் சேவைகள் முடங்கின. இதனைத்தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சர்வர் முடங்கியுள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூகுள் நிறுவனம் விளக்கம் தெரிவித்தது. 

  கோளாறு சரி செய்யப்பட்டு, பிரச்சனை குறித்து தெரிவிக்கப்படும் என யுடியூப் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சில முடங்கிய சில நிமிடங்களிலேயே கூகுள் சேவைகள் படிப்படியாகத் செயல்படத் தொடங்கின. இந்நிலையில் இன்று மீண்டும் ஜிமெயில் சரியாக வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. ஜிமெயிலில் இன்பாக்ஸ் செய்திகளை அணுகும் போதும், செய்திகளை அனுப்பும்போது தாமதங்களை சந்தித்ததாக சில பயனர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய பிரச்சினை உலகின் சில பகுதிகளுக்கு மட்டும் ஏற்பட்டுள்ளதா அல்லது 2 நாட்களுக்கு முன்பு வந்த உலகளாவிய முடக்கமா என்பது தொடர்பான எந்த தகவல்களையும் கூகுள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. 

  தற்செயலாக, கூகுளின் கிளவுட் கேமிங் தளமான ஸ்டேடியாவும் செயலிழப்பை சந்தித்ததாக தகவல்கள் கூறுகின்றன.  இந்நிலையில், கூகுள் ஒரு சேவை புதுப்பிப்பு செய்தியில் வெளியிட்டதாவது, "ஜிமெயிலின் சிக்கல் தீர்க்கப்பட்டது. சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். உங்கள் பொறுமை மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி. 

  NTPC பட்டதாரிகளுக்கான பார்முலாவை வெளியிட்டது RRB!

  கணினி நம்பகத்தன்மை கூகுளில் முன்னுரிமை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் கணினிகளை சிறந்ததாக்க தொடர்ச்சியான மேம்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம்"என்று குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் என்ன சிக்கல் நடந்தது, ஜிமெயிலிலிருந்து செய்திகளை அனுப்புவதில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் எதுவும் விளக்கப்படவில்லை.  

  இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த பெரிய செயலிழப்புக்கான காரணத்தை கூகுள் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த 14ம் தேதி 3.47AM PTக்கு உள் சேமிப்பக ஒதுக்கீடு பிரச்சினை காரணமாக சுமார் 45 நிமிடங்கள் அங்கீகார அமைப்பு செயலிழப்பை சந்தித்தது. இந்த காலகட்டத்தில் சேவைகளின் அணுக்கள் முறை முடங்கியது. இதையடுத்து அங்கீகார அமைப்பு சிக்கல் 4:32 AM PTல் தீர்க்கப்பட்டது. அனைத்து சேவைகளும் இப்போது மீட்டமைக்கப்பட்டுள்ளன, ”என்று கூகுள் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருந்தது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: